Advertisement


‘கடவுளின் மண்ணில்’ கலக்கல்

நவம்பர் 04, 2018.
 Comments  
 


dhoni, kohli, india, kerala
 

இந்திய கிரிக்கெட் அணியிருக்கு மீன் வகைகள், வாழை இலை சாப்பாடு என கேரள மண்ணில் விதவிதமாக உணவு வழங்கப்பட்டன.

இந்தியாவின் வட மாநிலத்துடன் ஒப்பிடும்போது தென் மாநிலத்தில் உணவு வகைகள் வேறு மாதிரியாக இருக்கும். நாம் அரிசி உணவை அதிகமாக சேர்த்தால், இதற்கு மாறாக அவர்கள் கோதுமையை உணவில் சேர்த்துக் கொள்வர். சமீபத்தில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டிக்காக ‘கடவுளின் சொந்த மண்’ என போற்றப்படும் கேரளா வந்த இந்திய வீரர்கள் எவ்வித பிரச்னையும் எதிர் கொள்ளவில்லை. திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் இந்திய அணியினர் தங்கினர். 

இந்த ஓட்டலின் நிர்வாகி கூறியது: 

போட்டிக்கு முன்பே, இரு அணி சார்பில் உணவு பட்டியல் தரப்பட்டிருந்தது. ஐந்து வகையான ‘ஜூஸ்’, பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட 4 வகையான உணவுகள், முந்திரி உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது. இந்திய அணி சார்பில் வழங்கப்பட்ட பட்டியலில், மீன் உணவு, தலசேரி பிரியாணி இருந்தன. இதைப்போல, வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்காக கிரில் சிக்கன், பார்பிகு உள்ளிட்டவை தரப்பட்டன.

வாழை இலை சாப்பாடு

தோனி வந்த வேகத்தில், நேராக சாப்பிடும் இடத்திற்கு சென்றார். இவருக்கு கேரளா மீன் உணவுகள் விருப்பம் என்பதால், நன்றாக சாப்பிட்டார். கேப்டன் கோஹ்லி ஆப்பம் மற்றும் மீன் வகைகளை ருசித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் விருப்பத்திற்கு ஏற்ப, தாய்லாந்து நாட்டின் உணவு வகைகள் பரிமாறப் பட்டன. ஜடேஜா, கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி  ஆகியோர் கேரளாவின் பிரபல ‘சத்ய’ விருந்து கேட்டனர். இதில், வாழை இலையில் சோறு உடன் அப்பளம், நான்கிற்கும் மேற்பட்ட காய்கறிகள் இடம் பெற்றிருக்கும். இதைத்தான், இவர்கள் மதிய உணவாக உட்கொண்டனர். இது தவிர, பாயசம், அடை மற்றும் இனிப்பு வகைகள் இரு அணி வீரர்களுக்காகவும்  ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்தன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?