Advertisement


வில்வித்தை: சவுகான் அதிருப்தி

நவம்பர் 04, 2018.
 Comments  
 


Rajat Chauhan, archery, india
 

புதுடில்லி: விளையாட்டு விதிகளை மீறி செயல்பட்ட இந்திய வில்வித்தை சங்கத்தின் அங்கீகாரத்தை மத்திய அரசு கடந்த 2012ல் ரத்து செய்தது. 

புதிதாக இன்னும் தேர்தல் நடத்தவில்லை. இதேபோல ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வான்டோ சங்கங்களும் தடையில் உள்ளன.சமீபத்திய அறிக்கையின் படி மத்திய அரசு அனுமதி பெறாத சங்கங்கள் இந்தியா சார்பில் விளையாட்டு நட்சத்திரங்களை அனுப்ப முடியாது என கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய வில்வித்தை வீரர் ராஜஸ்தானின் ரஜத் சவுகான், 23, கூறியது:

இந்தியாவுக்காக பங்கேற்க முடியாமல் போகும் நிலையில் சர்வதேச போட்டிகளில் களமிறங்குவது ‘வேஸ்ட்’. அனுமதி இல்லாததால் ஒலிம்பிக் பதக்க திட்டத்திலும் எங்களை சேர்க்கவில்லை. போக்குவரத்து செலவுகளும் கிடைக்காது. 2014 ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற போதும் இன்னும் அரசு வேலை கிடைக்கவில்லை. தற்போதைய சர்ச்சைகளால் வேலை வாய்ப்புக்கு கூடுதல் சிக்கல் ஏற்படும். ‘ஸ்பான்சர்கள்’ யாரும் ஒப்பந்தம் செய்ய மறுக்கின்றனர். எங்களது எதிர்காலம் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டதாகவே நினைக்கிறேன். இவ்வாறு ரஜத் சவுகான் தெரிவித்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?