Advertisement


கலப்பு இரட்டையர் ஹாக்கி அறிமுகம்

நவம்பர் 03, 2018.
 Comments  
 


Hockey India League, Mixed Hockey
 

புதுடில்லி: ஹாக்கி இந்தியா லீக் தொடரில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

ஐ.பி.எல்., கிரிக்கெட் பாணியில், 2013ல் ஹாக்கி இந்தியா லீக் துவங்கப்பட்டது. ராஞ்சி, டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்றன. புரோ மல்யுத்தம், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போல இதற்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையத்துவங்கியது. 

இதனால், ஹாக்கி லீக் ஐந்து ‘சீசன்’ முடிந்தநிலையில், நிதிநெருக்கடி காரணமாக இந்த ஆண்டு நடக்கவில்லை. டில்லி அணியும் தொடரிலிருந்து வெளியேறியது. மீண்டும் ரசிகர்களின் ஆதரவைப்பெறுவதற்காக, புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

என்ன மாற்றம்: இது குறித்து ஹாக்கி இந்தியா அமைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ அடுத்த ஆண்டு நவம்பர்– டிசம்பரில் நடக்கவுள்ள ஹாக்கி இந்தியா லீக் தொடரில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சாதாரணமாக ஒரு அணியில் 11 பேர் விளையாடுவர். இதற்குப்பதில், தலா 5 வீரர்கள் பங்கேற்கும் வகையில் மாற்றி அமைக்கப்படும். இதே பாணி, பெண்கள் பிரிவிலும் கடைபிடிக்கப்படும். ஒரே நேரத்தில் இருவருக்குமான போட்டிகள் நடக்கும். இது தவிர, கலப்பு இரட்டையர் போட்டிகளும் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஒட்டுமொத்தமாக, மூன்றுவிதமான போட்டிகள் நடத்தப்படும். 

இதனால், அணி நிர்வாகிகளின் செலவு குறைக்கப்படும். போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட நேரம் 30 நிமிடம் மட்டுமே என்பதால், ரசிகர்கள் விறுவிறுப்பான ஆட்டத்தை பார்க்கலாம். இந்த மாற்றத்திற்கு நான்கு அணிகள் ஆதரவு தெரிவித்துள்ளன,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?