Advertisement


உசைன் போல்ட் நம்பிக்கை

நவம்பர் 03, 2018.
 Comments  
 


Usain Bolt, Jamaica Sprinter, Professional Footballer, Central Coast Mariners, Australia Club
 

மெல்போர்ன்: ஜமைக்கா முன்னாள் தடகள வீரர் உசைன் போல்ட், 32. ஒலிம்பிக்கில் எட்டு தங்கம் வென்றுள்ள இவர், ஓய்வுக்குப்பின் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். ஆஸ்திரேலிய ‘ஏ’ லீக் தொடரில், பங்கேற்கும் சென்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் கிளப் அணியில் பயிற்சிக்காக இணைந்தார். நட்பு கால்பந்து போட்டியில் இரண்டு கோல் அடித்தார். தற்போது, எதிர்பார்க்கப்பட்ட தொகை (ரூ.15 கோடி) கிடைக்காத காரணத்தால் மரைனர்ஸ் அணி சார்பாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இதனால், போல்ட்டின் கால்பந்து கனவு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து போல்ட் கூறுகையில்,‘‘மரைனர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனது ஏமாற்றம். பல நாடுகளை சேர்ந்த கிளப் அணியினர், எனது மானேஜரை தொடர்பு கொள்கின்றனர். எனவே, வேறு அணியுடன் ஒப்பந்தம் ஏற்படும் என நம்புகிறேன். எனது கால்பந்து கனவும் நிச்சயமாக நிறைவேறும். சில தவறுகளை திருத்திக்கொள்கிறேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பாட்டால் சாதிக்கலாம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?