Advertisement


இளம் இந்தியா வெண்கலம்: தெற்காசிய கால்பந்தில் ஆறுதல்

நவம்பர் 03, 2018.
 Comments  
 


SAFF U15 Championship, Football, India, Bronze Medal
 

காத்மண்டு: தெற்காசிய கால்பந்தில் (15 வயது) இளம் இந்திய அணி வெண்கலம் வென்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் 1–0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்தது.

நேபாளத்தில், 15 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து (எஸ்.ஏ.எப்.எப்.,) சாம்பியன்ஷிப் தொடரின் 5வது சீசன் நடந்தது. இதன் 3–4வது இடங்களுக்கான போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியா, நேபாளம் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் இந்திய வீரர் த்லாசே வான்லால்ருத்பெலா ஒரு கோலடித்தார். இதற்கு நேபாள அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்திய அணி 1–0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் 72வது நிமிடத்தில் நேபாள அணியினரின் கோலடிக்கும் முயற்சிக்கு இந்திய கோல்கீப்பர் முட்டுக்கட்டை போட்டார். ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ– கிக்’ வாய்ப்பில் இந்தியாவின் கோலடிக்கும் வாய்ப்பு வீணானது.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக வெண்கலம் வென்றது. இதற்கு முன், 2 தங்கம் (2013, 2017), 2 வெள்ளி (2011, 2015) வென்றிருந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?