Advertisement


சாதிப்பரா இந்திய ‘வேகங்கள்’: சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கணிப்பு

நவம்பர் 02, 2018.
 Comments [1]  
 


India Pace Bowlers, England World Cup Cricket
 

புதுடில்லி: உலக கோப்பை தொடர் விரைவில் வரவுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் பும்ராவைத் தவிர மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதில்லை. புது வரவு கலீல் அகமது மட்டும் நம்பிக்கை தருகிறார்.

இந்திய கிரிக்கெட்டில் தற்போது நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனினும் ஒருநாள் போட்டிகள் என்று வரும் போது இவர்களால் சிறப்பாக செயல்பட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இத்தொடரில் இடம் பெறும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியது:

பும்ரா, புவனேஷ்வர், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என ஐந்து ‘வேகங்கள்’ இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று வருகின்றனர். இவர்களில் பும்ராவைத் தவிர மற்றவர்கள் ஒரு நாள் அணியில் இடம் பெறுவது உறுதியில்லாமல் உள்ளது.

இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயத்துக்குப் பின் மீண்டும் அணிக்கு திரும்பிய புவனேஷ்வர் சரிவர செயல்படவில்லை. பேட்ஸ்மேன்கள் கணிக்கும் வகையில் பவுலிங் செய்கிறார். இயற்கையாக ‘சுவிங்’ செய்யும் திறன் படைத்த இவர், திடீரென பந்துவீச்சில் மாற்றம் செய்தது எதிர்பார்த்த பலனை தரவில்லை. தென் ஆப்ரிக்க பவுலர்களைப் போல செயல்பட முயற்சிக்கிறார். இதில், வெற்றி கண்டால் நல்லது தான். மாறாக தொடர்ந்து தடுமாறினால், ஒருநாள் அணியில் வாய்ப்பை இழக்க நேரிடும். பேட்டிங் அல்லது பவுலிங்கில் சிறப்பாக செயல்படும் வீரர்களைத் தான் கேப்டன்கள் விரும்புவர். புவனேஷ்வரைப் பொறுத்தவரையில் பன்முகத் திறமை கொண்டவர் அல்ல. இவர் அணியில் நீடிக்க வேண்டும் என்றால் பந்துகளை ‘சுவிங்’ செய்வது முக்கியம். 

கலீல் நம்பிக்கை: சமீபத்திய புது வரவான கலீல் அகமது சராசரியாக மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் பவுலிங் செய்கிறார். வங்கதேசத்தின் முஸ்தபிஜுர் ரஹ்மான் போல பந்து வீசுகிறார். சற்று தாமதமாக பந்துகளை இரு பக்கமும் ‘சுவிங்’ செய்கிறார். இது ஒருநாள் போட்டிகளில் பெரிதும் கைகொடுக்கும். மும்பை போட்டியில் வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ், ஹெட்மயரை இப்படித் தான் வெளியேற்றினார். 

இவரை சரியான பாதையில் கொண்டு சென்றால் சிறப்பான வீரராக வலம் வருவார். இப்போதைய நிலையில் உலக கோப்பை தொடரில் பும்ரா, ‘ஆல் ரவுண்டர்’ பாண்ட்யா களமிறங்கும் ‘லெவனில்’ வாய்ப்பு பெறுவர். இவர்களுடன் கலீல் இடம் பெறலாம். புவனேஷ்வர் அல்லது மற்றவர்களில் யார் இடம் பெறுவது என்பது குறித்து நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.

இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 2 weeks ago | Report abuse
நம்புவோம்... சாதிப்போம்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?