Advertisement


ஐ.எஸ்.எல்.,: கோவாவை வென்றது ஜாம்ஷெட்பூர்

நவம்பர் 01, 2018.
 Comments  
 


ISL Soccer, Football, Jamshedpur FC, FC Goa
 

ஜாம்ஷெட்பூர்: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் அசத்திய ஜாம்ஷெட்பூர் அணி 4–1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை தோற்கடித்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 5வது சீசன் நடக்கிறது. ஜாம்ஷெட்பூரில் நடந்த லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர், கோவா அணிகள் மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மைக்கேல் சூசைராஜ் முதல் கோல் அடித்தார். இதற்கு, 33வது நிமிடத்தில் கோவா அணியின் மோர்டடா செரிக்னே பால் ஒரு கோலடித்து பதிலடி தந்தார். முதல் பாதி முடிவு 1–1 என சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஜாம்ஷெட்பூர் அணிக்கு மைக்கேல் சூசைராஜ் 50வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலடித்தார். தொடர்ந்து அசத்திய ஜாம்ஷெட்பூர் அணிக்கு மெமோ (77வது நிமிடம்), கவுரவ் முகி சுமீத் பாஸி (78வது) தலா ஒரு கோலடித்து கைகொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய கோவா அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 4–1 என்ற கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது. ஜாம்ஷெட்பூர் அணி இதுவரை விளையாடிய 6 போட்டியில், 2 வெற்றி, 4 ‘டிரா’ என 10 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது. முதலிரண்டு இடங்களில் முறையே வடகிழக்கு யுனைடெட் (11 புள்ளி), கோவா (10) அணிகள் உள்ளன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?