Advertisement


‘ஜூனியர்’ கால்பந்து: இந்தியா ‘ஷாக்’

நவம்பர் 01, 2018.
 Comments  
 


SAFF U15 Championship, Footbal, India, Semi Final
 

லலித்புர்: தெற்காசிய கால்பந்து தொடரின்(15 வயது)அரையிறுதியில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

நேபாளத்தில்தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்(15 வயது)நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்திய அணி வங்கதேசத்தை சந்தித்தது. போட்டியின் 17வது நிமிடத்தில் இந்தியாவின் ஹார்ஷ் பத்ரே ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் 1–0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் வங்கதேச அணி வீரர்கள் அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்த போதும் கோல் அடிக்க முடியவில்லை. போட்டியின் கடைசி நிமிடத்தில் (‘ஸ்டாப்பேஜ் நேரம்) வங்கதேச அணிக்கு ‘பெனால்டி’ கிடைத்தது. இதில் அஷ்குல் ரஹ்மான் (90+3வது) கோலாக மாற்ற போட்டி 1–1 என சமன் ஆனது.

வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ முதல் நான்கு வாய்ப்பிலும் வங்கதேச அணி கோல் அடித்தது. இந்திய அணி இரு கோல் மட்டும் அடித்தது. முடிவில் இந்திய அணி 2–4 என்ற கணக்கில் தோல்வியடைந்து, பைனல் வாய்ப்பை இழந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?