Advertisement


ஐ.எஸ்.எல்.,: கோல்கட்டாவை வென்றது பெங்களூரு

அக்டோபர் 31, 2018.
 Comments  
 


ISL Football, Kolkata, Bangaluru
 

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் பெங்களூரு அணி 2–1 என்ற கோல் கணக்கில் கோல்கட்டாவை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 5வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதின. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் கோல்கட்டா அணியின் கோமல் தடால் முதல் கோல் அடித்தார். இதற்கு, முதல் பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (45+3) பெங்களூரு அணியின் நிகோலஸ் பெடர் ஒரு கோலடித்து பதிலடி தந்தார். முதல் பாதி முடிவு 1–1 என சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய பெங்களூரு அணிக்கு 47வது நிமிடத்தில் எரிக் பார்டலு ஒரு கோல்டித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய கோல்கட்டா அணியினரால் கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் சுனில் செத்ரி தலைமையிலான பெங்களூரு அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி, இதுவரை விளையாடிய 4 போட்டியில் 3 வெற்றி, ஒரு ‘டிரா’ என 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. கோல்கட்டா அணி 6 போட்டியில் 2 வெற்றி, ஒரு ‘டிரா’, 3 தோல்வி என, 7 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் முறையே வடகிழக்கு யுனைடெட் (11 புள்ளி), கோவா (10) அணிகள் உள்ளன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?