Advertisement


ஸ்விடோலினா சாம்பியன்

அக்டோபர் 28, 2018.
 Comments  
 


Elina Svitolina, wta tennis
 

சிங்கப்பூர்: டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் 3–6, 6–2, 6–2 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை தோற்கடித்தார்.

சிங்கப்பூரில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் டபிள்யு.டி.ஏ., தரவரிசையில் ‘டாப்–8’ இடங்களை பிடித்த வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றனர். இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா மோதினர்.

முதல் செட்டை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6–3 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஸ்விடோலினா 2வது செட்டை 6–2 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய ஸ்விடோலினா 6–2 என வென்றார்.

இரண்டு மணி நேரம், 23 நிமிடம் நீடித்த போட்டியில் ஸ்விடோலினா 3–6, 6–2, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக கோப்பை வென்றார். இதன்மூலம் டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் உக்ரைன் வீராங்கனையானார். 

தவிர, அமெரிக்காவின் செரினாவுக்கு (2013) பின் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் தொடரில் பட்டம் வென்ற வீராங்கனையானார். இவர், கடந்த 2 சீசனில் (2017–18) விளையாடிய 9 பைனலிலும் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?