Advertisement


ஷரபோவா புதிய ‘கூட்டணி’

அக்டோபர் 26, 2018.
 Comments  
 


Sharapova and Alexander, tennis
 

லண்டன்: ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா, பிரிட்டனை சேர்ந்த அலெக்சாண்டருடன் காதலில் விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவை தெரியாத ஆண்கள் மிகவும் குறைவு. 6.2 அடி உயரம், அழகிய கண்கள், பளிச் சிரிப்பு என ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்வார். ரஷ்யாவை சேர்ந்த இவர் 2012ல் சுலோவேனியா கூடைப்பந்து வீரர் சாசாவுடன் பழகினார். பின், 2013ல் பல்கேரியா டென்னிஸ் வீரர் டிமிட்ரிவுடன் இணைந்தார். அடுத்த இரு ஆண்டில் இவரையும் பிரிந்தார் ஷரபோவா. தனி நபராக சுற்றி வந்த ஷரபோவா மீண்டும் காதலில் விழுந்துள்ளார்.

இம்முறை பிரிட்டன் தொழிலதிபர் அலெக்சாண்டர் கில்க்ஸ், 39, உடன் சுற்றி வருகிறார். நியூயார்க்கில் செயல்படும் பிரபல ‘ஆன்லைன்’ ஏல நிறுவனமான ‘பாடில் 8’ல் சக உரிமையாளராக உள்ளார். பிரிட்டனில் மிகப்பெரும் செல்வந்தராக வலம் வரும் கில்க்சிற்கு ‘ஹாலிவுட்’ வரை நட்பு இருக்கிறது. பிரிட்டன் அரண்மனை இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரிக்கு நெருங்கிய நண்பராக உள்ளார். இவ்வளவு மதிப்புமிக்க இவர், ஷரபோவாவின் அழகில் உருகிவிட்டார் போல. காதலுக்கு மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக, ரஷ்ய மொழியை கில்க்ஸ் கற்று வருகிறார்.

ஷரபோவா சம்மதம்

கடந்த ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தான் முதல் முறையாக இருவரும் பார்த்துள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் இவர்கள் ஒன்றாக சுற்றிய போட்டோக்கள் ‘மீடியா’ கண்களில் சிக்கின. இதை இருவரும் மறுத்து விட்டு, அடிக்கடி லண்டன் தெருக்களில் உலா வந்தனர். தற்போது கில்க்ஸ் உடனான காதலை ஷரபோவா ஒப்புக்கொண்டார். இங்கிலாந்தில் இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோவை ‘இன்ஸ்டாகிராமில்’ ஷரபோவா வெளியிட்டுள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?