Advertisement


ஹர்மன்பிரீத் ‘ஹாட்ரிக்’: இந்தியா வெற்றி

அக்டோபர் 25, 2018.
 Comments  
 


Harmanpreet Singh, hockey, india
 

மஸ்கட்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் சிங் ‘ஹாட்ரிக்’ கோலடித்து கைகொடுக்க இந்திய அணி 4–1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில், 5வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா, ஓமன் என, 6 அணிகள் பங்கேற்கின்றன. முதல் மூன்று போட்டியில் ஓமன் (11–0), பாகிஸ்தான் (3–1), ஜப்பான் (9–0) அணிகளை வீழ்த்திய இந்தியா, மலேசியாவுக்கு எதிராக ‘டிரா’ (0–0) செய்து, அரையிறுதிக்குள் நுழைந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. 

ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோல் அடித்தார். பின், 10வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜந்த் சிங் ஒரு ‘பீல்டு’ கோலடித்தார். தொடர்ந்து போராடிய தென் கொரிய அணிக்கு 20வது நிமிடத்தில் கேப்டன் செயன்கில் லீ ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்திய அணி 2–1 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஆட்டத்தின் 47, 59வது நிமிடங்களில் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். இதற்கு தென் கொரிய வீரர்களால் பதிலடி தர முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

3

அபாரமாக ஆடிய இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங், இம்முறை ‘ஹாட்ரிக்’ கோலடித்த 3வது வீரரானார். ஏற்கனவே இந்தியாவின் தில்பிரீத் சிங், பாகிஸ்தானின் அலீம் பிலால் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்திருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?