Advertisement


ஆசிய ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா

அக்டோபர் 24, 2018.
 Comments [3]  
 


india hockey team, Asian Champions Trophy
 

மஸ்கட்: இந்தியா, மலேசிய அணிகள் மோதிய ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் லீக் போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. 

ஓமனில் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் மூன்று போட்டியில் ஓமன் (11–0), பாகிஸ்தான் (3–1), ஜப்பானை (9–0) வென்றிருந்தது. 

நான்காவது போட்டியில் மலேசியாவை சந்தித்தது. சமீபத்திய ஜகார்த்தா ஆசிய விளையாட்டு அரையிறுதியில் இந்திய அணி தோற்று இருந்ததால் இம்முறை பதிலடி தரும் என நம்பப்பட்டது. மாறாக இந்திய அணி வீரர்கள் ஏமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

மலேசிய கோல் பகுதிக்குள் 22 முறை நுழைந்த போதும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்திய அணி எடுத்த 6 கோல் முயற்சி வாய்ப்புகளும் வீணாகின. முடிவில் கோல் எதுவுமின்றி (0–0) போட்டி ‘டிரா’ ஆனது. 

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் இந்திய அணி 3 வெற்றி, 1 ‘டிரா’ என 10 புள்ளிகள் பெற்று ‘நம்பர்–1’ இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. 2வது இடத்தில் உள்ள மலேசியாவும் (10) அரையிறுதிக்குள் நுழைந்தது. 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Rajan 4 weeks ago | Report abuse
இந்த பிரச்னை ரொம்ப வருஷமா இருக்கு பெனால்டி கோர்னெர் எஸ்பிர்ட்ஸ் மூலமா ட்ரைனிங் எடுத்ததால் தான் கோல் போடமுடியும்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
எந்திரன் 4 weeks ago | Report abuse
வாழ்த்துக்கள் இந்தியா முன்ன்னேறிச் செல்லுங்கள்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 4 weeks ago | Report abuse
வாழ்த்துக்கள்... மீண்டும் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?