Advertisement


இந்திய மண்ணில் ஹாக்கி பைனல்ஸ்

அக்டோபர் 23, 2018.
 Comments  
 


india hockey, Series Finals
 

லாசென்னே: ஹாக்கி ‘சீரிஸ்’ பைனல்ஸ் தொடரின் மூன்றாம் கட்ட போட்டிகள் இந்திய மண்ணில் நடக்கவுள்ளன.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) சார்பில் ஹாக்கி ‘சீரிஸ்’ பைனல்ஸ் நடத்தப்படுகிறது. இது, மூன்று இடங்களில் மூன்று கட்டமாக நடத்தப்படும். மொத்தம் 24 அணிகள் தலா 8 ஆக பிரிக்கப்பட்டு மோதும். ஒவ்வொன்றிலும் ‘டாப்–2’ இடம் பிடிக்கும் அணிகள் டோக்கியோ ஒலிம்பிக் (2020) போட்டிக்கான தகுதிச்சுற்றில் இடம் பிடிக்கும்.

முதல் கட்ட போட்டிகள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 23 முதல் மே 1 வரை நடக்கவுள்ளது. இரண்டாம் கட்ட போட்டிகள் பிரான்சின் லி டய்குயட் நகரில் (ஜூன் 15–23) நடக்கும். இதன் மூன்றாவது கட்ட போட்டிகள் இந்தியாவில், அடுத்த ஆண்டு ஜூன் 6 முதல் 16 வரை நடக்கும். இந்திய அணியுடன் இணைந்து ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன. இதற்கான இடம் இன்னும் அறிவிக்கப்பட வில்லை.

பெண்களுக்கான மூன்று கட்ட போட்டிகள் முறையே அயர்லாந்து (ஜூன் 8–16), ஜப்பான் (ஜூன் 15–23), வாலன்சியாவில் (ஜூன் 19–27) நடக்கவுள்ளன. இந்திய பெண்கள் ஜப்பான் மண்ணில் விளையாடுவர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?