Advertisement


பரிதவிக்கும் காஷ்யப்

அக்டோபர் 13, 2018.
 Comments  
 


Parupalli Kashyap, badminton
 

புதுடில்லி: நெதர்லாந்தில் தனது ‘பாஸ்போர்ட்’டை தவறிவிட்ட இந்திய பாட்மின்டன் வீரர் காஷ்யப் மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளார்.

இந்திய பாட்மின்டன் வீரர் காஷ்யப், 32. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இவர், கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றார். இதற்கிடையே, நெதர்லாந்து ஓபனில் பங்கேற்க சென்றிருந்தார். இதன் தலைநகர் ஆம்ஸ்டிராடமில் ‘பாஸ்போர்ட்’டை தவறவிட்டுள்ளார். இதனால், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவின் உதவியை கேட்டுள்ளார்.

இது குறித்து காஷ்யப் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ நெதர்லாந்தின் ஆம்ஸ்டிராடம் நகரில் ‘பாஸ்போர்ட்’டை தொலைத்து விட்டேன். இன்று டென்மார்க் ஓபனில் பங்கேற்க உள்ளேன். இதனால், டென்மார்க்கின் ஒடின்சி நகருக்கு செல்வதற்கு உதவி செய்ய வேண்டும் பின், பிரெஞ்ச் ஓபன், சர்லக்ஸ் (ஜெர்மனி) ஓபன் உள்ளிட்ட தொடரில் கலந்து கொள்ள வேண்டி உள்ளதால்  உதவி தேவைப்படுகிறது,’ என, குறிப்பிட்டுள்ளார்.

இதே கோரிக்கையை பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரின் டுவிட்டருக்கும் அனுப்பி உள்ளார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?