Advertisement


‘பாரா’ பாட்மின்டன்: இந்தியா கலக்கல்

அக்டோபர் 13, 2018.
 Comments  
 


para asian games, badminton
 

ஜகார்த்தா: இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு நடந்தது. இதன் கடைசி நாளில், ஆண்கள் பாட்மின்டனில் (எஸ்.எல்.3 பிரிவு) இந்தியாவின் பிரமோத் பகாத் 21–19, 15–21, 21–14 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் உகுனை வீழ்த்தி தங்கம் வென்றார். இதைப்போல, பாட்மின்டன் எஸ்.எல்.4 பிரிவில் இந்திய வீரர் தருண் 21–16, 21–6 என சீனாவின் யூயங்கை தோற்கடித்து தங்கத்தை தனதாக்கினார்.

நேற்றுடன் 8 நாள் நடந்த ஆசிய பாரா விளையாட்டு திருவிழா முடிவுக்கு வந்தது. இந்திய அணி 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்களுடன் 9வது இடம் பிடித்தது. இதன் மூலம், இந்த விளையாட்டில் இந்தியா தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்துள்ளது. இதற்கு முன், நடந்த முதல் (2010, சீனா– 14 பதக்கம்) மற்றும் இரண்டாவது (2014, தென் கொரியா– 33 பதக்கம்) தொடரில் இதை விட குறைவான பதக்கமே பெற்றிருந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக, சீனா (172 தங்கம், 88 வெள்ளி, 59 வெண்கலம்– 319 பதக்கம்) பதக்கப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே தென் கொரியா (145 பதக்கம்), ஈரான் (136 பதக்கம்) அணிகள் பிடித்தன.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?