Advertisement


கால்பந்து: இந்தியா– சீனா ‘டிரா’

அக்டோபர் 13, 2018.
 Comments  
 


india soccer team, china
 

சுஷு: இந்தியா, சீனா அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

அடுத்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான, பயிற்சியாக இந்திய அணி, சீனா சென்றுள்ளது.இரு அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி சுஷு பகுதியில் நடந்தது. இந்திய அணிக்கு சந்தேஷ் ஜிங்கன் கேப்டனாக களமிறங்கினார்.

போட்டி துவங்கிய முதலே சீன அணி (தரவரிசையில் 76வது இடம்) அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்தது. இவர்கள் கோல் போஸ்ட்டை நோக்கி பந்தை கடத்தி கொண்டே இருந்தனர். இதற்கு, சற்றும் சளைக்காமல் இந்திய அணியினர் (97வது இடம்) வாய்ப்பை தடுத்துக்கொண்டே இருந்தனர். முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

59வது நிமிடத்தில் இந்தியாவின் உடான்டா சிங் அடித்த பந்து கோல்போஸ்ட் வெளியே சென்றது. 58வது நிமிடத்தில் இந்தியாவின் அனிருத் தபாவை ‘பவுல்’ செய்த சீனாவின் லியுவுக்கு ‘எல்லோ கார்டு’ காட்டப்பட்டது. கடைசி 20 நிமிடத்தில் சீனா கோல் அடிக்க போராடியது. இதை நமது அணியினர் துடிப்பாக தடுக்க, ஆட்டம் விறுவிறுப்படைந்தது. இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் அரணாக மாற கூடுதல் பலம் கிடைத்தது. கடைசி வரை போராடிய இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. முடிவில், போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’வில் முடிந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?