Advertisement


ரூ. 1.47 கோடி சூதாட்ட பேரம்: மாலிக் மீது வார்ன் புகார்

அக்டோபர் 12, 2018.
 Comments  
 


Warne, australia cricket team
 

மெல்போர்ன்: ‘‘மோசமாக பந்துவீசி டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தால் ரூ. 1.47 கோடி தருவதாக பாகிஸ்தான் மாஜி கேப்டன் சலீம் மாலிக் அணுகினார்,’’ என, சுயசரிதையில் ஷேன் வார்ன் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், 49. கடந்த 1992ல் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான இவர், 145 போட்டியில் 708 விக்கெட் வீழ்த்தினார். கடந்த 2007ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.  தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ‘நோ ஸ்பின்’ என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். இதில், சலீம் மாலிக்கின் சூதாட்ட பேரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

இது குறித்து வார்ன் கூறுகையில், ‘‘கடந்த 1994ல் கராச்சியில் நடந்த டெஸ்டில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதன் கடைசி நாளில் பாகிஸ்தானின் சலீம் மாலிக், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுமாறு கூறினார். இதில் மோசமாக பந்துவீசி, இப்போட்டியை ‘டிரா’ செய்தால் அடுத்த அரைமணி நேரத்தில் எனது ரூமில் ரூ. 1.47 கோடி பணம் இருக்கும் என உறுதி அளித்தார்,’’ என்றார்.

இதற்கு வார்ன் சம்மதிக்கவில்லை. இறுதியில், இப்போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

இத்தொடரில் மாலிக் பேரம் பேசியதாக வார்ன், மார்க் வாக், டிம் மே உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் ஏற்கனவே 1995ல் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக நடந்த விசாரணையில் பாகிஸ்தான் புக்கி சலீம் பர்வேஸ், ரூ. 42.5 லட்சம் அடங்கிய ‘சூட்கேசை’ மாலிக்கிடம் கொடுத்ததாக கூறினார். இதனை மாலிக் மறுத்தார். தற்போது மாலிக் எவ்வளவு தொகை கொடுக்க முன்வந்தார் என்பதை வார்ன் அம்பலப்படுத்தியுள்ளார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?