Advertisement


யூத் ஒலிம்பிக்: மனு பாகர் வெள்ளி

அக்டோபர் 12, 2018.
 Comments  
 


Manu Bhaker, youth olympics, silver
 

பியுனஸ் அர்ஸ்: யூத் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் இந்தியாவின் மனு பாகர், தஜிகிஸ்தானின் பெஜான் ஜோடி வெள்ளி வென்றது.

அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் ஏர்சில், 3வது யூத் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு பைனலில் இந்தியாவின் மனு பாகர், தஜிகிஸ்தானின் பெஜான் ஜோடி, ஜெர்மனியின் சீகர், பல்கேரியாவின் கிரோவ் ஜோடியை சந்தித்தது. இதில் மனு பாகர் ஜோடி 3–10 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

இரண்டாவது இந்தியர்

ஏற்கனவே தனிநபர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் தங்கம் வென்றிருந்த மனு பாகர், யூத் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற 2வது இந்தியரானார். இம்முறை ஜூடோ வீராங்கனை தபாபி தேவி, 44 கி.கி., எடைப்பிரிவு தனிநபர் மற்றும் கலப்பு அணிகள் பிரிவில் தலா ஒரு வெள்ளி வென்றிருந்தார்.

பைனலில் லக்சயா சென்

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பாட்மின்டன் அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கோடாய் நரோகா மோதினர். முதல் செட்டை 14–21 என இழந்த லக்சயா சென், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21–15 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 24–22 என தன்வசப்படுத்தினார். முடிவில் லக்சயா சென் 14–21, 21–15, 24–22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். பைனலில் இவர், சீனாவின் ஷிபெங் லீயை சந்திக்கிறார்.

அரையிறுதியில் இந்தியா

ஆண்களுக்கான ஹாக்கி காலிறுதியில் இந்தியா, போலந்து அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா சார்பில் ஆனந்த் (1, 8வது நிமிடம்), மணிந்தர் சிங் (3வது), சஞ்சய் (17வது) கோலடித்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?