Advertisement


கால்பந்து: இந்தியா–சீனா மோதல்

அக்டோபர் 12, 2018.
 Comments  
 


sandesh jhingan, india, soccer
 

சுஷு: இந்தியா, சீனா அணிகள் மோதும் நட்பு கால்பந்து போட்டி இன்று நடக்கிறது. இதில், இந்திய அணியின் புதிய கேப்டனாக ஜிங்கன் களமிறங்குகிறார்.

அடுத்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான, பயிற்சியாக இந்திய அணி, சீனா சென்றுள்ளது. இரு அணிகளும் 1997ல் கொச்சியில் நடந்த நேரு கோப்பையில் விளையாடின. 21 ஆண்டுக்குப்பின் இன்று நட்பு போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கின்றன. சீன மண்ணில் மோதுவது இதுவே முதல் முறை. ஷாங்காய் நகரிலிருந்து 100 கி,மீ.,தொலைவில் உள்ளது சுஷு பகுதி. இங்குள்ள கால்பந்து ரசிகர்களே இன்றைய போட்டியின் விறுவிறுப்புக்கு கைகொடுப்பார்கள் என நம்பலாம்.

புதிய கேப்டன்

இந்திய அணியை பொறுத்தவரை ஆசிய கோப்பையில் அதிகபட்சமாக 1964ல் பைனல் வரை முன்னேறியது. சமீபத்தில்தான், ‘டாப்–100’ பட்டியலில் (97வது இடம்) இடம்பிடித்தது.  இதுவரை இந்திய அணிக்காக 100 போட்டிக்கும் அதிகமாக விளையாடி உள்ள செத்ரியின் அனுபவம் பலம். திடீரென இவருக்குப்பதில் கேப்டன் பொறுப்பு தற்காப்பு வீரர் சந்தேஷ் ஜிங்கனுக்கு (26 போட்டி) வழங்கப்பட்டுள்ளது. இது, எந்த அளவு பலன் தரும் என்பபை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பலமான சீனா

தரவரிசையில் 76வது இடத்தில் உள்ள சீன அணி, நமது வீரர்களுடன் ஒப்பிடும்போது சற்று பலமானதாகவே தெரிகிறது. ‘பிபா’ உலக கோப்பையில் இதுவரை இந்திய அணி பங்கேற்றது கிடையாது. ஆனால், சீனா ஒரு முறை (2002) பங்கேற்று லீக் சுற்றுடன் திரும்பி உள்ளது. ஆசிய கோப்பையில் அதிகபட்சமாக இரண்டு முறை (1984, 2004) இரண்டாவது இடம் பிடித்துள்ளது. கடந்த 2006ல் உலக கோப்பை வென்ற இத்தாலி அணி பயிற்சியாளர் மார்செல்லோ லிப்பி, இம்முறை சீனாவுக்கு பயிற்சி தருவது நமக்கு சிக்கல்தான்.

இந்திய அணி பயிற்சியாளர் கான்ஸ்டான்டின் கூறுகையில்,‘‘ ஜிங்கன் மனம் தளராமல் போராடக்கூடியவர். திறமையான கேப்டனாகவும் இவர் திகழ்வார்,’’ என்றார்.

ஜிங்கன் கூறுகையில்,‘‘ கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலம், எனது கனவு நனவாகி உள்ளது. செத்ரி, ஜீஜே, குர்பிரீத் உள்ளிட்டோர் எனது பணியை எளிதாக்குவர்,’’என்றார்.

17

இதுவரை இரு அணிகளும் 17 போட்டியில் மோதி உள்ளன. இதில் 12ல் இந்திய அணி வீழ்ந்தது. 5 போட்டி ‘டிரா’வில் முடிந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?