Advertisement


அஷ்வின் ‘500’

அக்டோபர் 12, 2018.
 Comments  
 


ashwin, india, test, 500 wickets
 

நேற்று பாவெலை அவுட்டாக்கிய இந்திய ‘சுழல்’ வீரர் அஷ்வின், முதல் தர போட்டிகளில் 500வது விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இவர் 64 டெஸ்ட் உட்பட 107 போட்டிகளில் இந்த இலக்கை எட்டினார்.

தவிர குறைந்த போட்டிகளில் இந்த இலக்கை எட்டிய இந்திய பவுலர்களில் அஷ்வின் 4வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் அமர் சிங் (90வது போட்டி), பத்மாகர் ஷிவல்கர் (103), வமன் குமார் (106) உள்ளனர். சுபாஷ் குப்தே, சந்திரசேகர் (110), பிரசன்னா, கும்ளே (112) 5, 6வது இடத்தில் உள்ளனர்.

5

இந்திய டெஸ்ட் அணியில் 294வது வீரராக மகாராஷ்டிரா வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், 26, நேற்று அறிமுகம் ஆனார். பும்ரா, ரிஷாப், விஹாரி, பிரித்விக்கு அடுத்து இந்த ஆண்டில் அறிமுகம் ஆன 5வது இந்திய டெஸ்ட் வீரர் ஆனார்.

இதற்கு முன் 2013ல் முகமது ஷமி, ரோகித் சர்மா, ரகானே, தவான், புவனேஷ்வர் குமார் என 5 பேர் டெஸ்டில் அறிமுகம் ஆகினர்.

17

கடந்த 2016 ஆகஸ்ட் முதல் இந்திய அணி சொந்தமண்ணில் 18 டெஸ்டில் பங்கேற்றது. இதில் அதிகமான டெஸ்டில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆனார் உமேஷ் யாதவ் (17). முகமது ஷமி 8, இஷாந்த் 7, புவனேஷ்வர் 5 டெஸ்டில் களமிறங்கினர்.

95

இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில் கடைசி 7 இன்னிங்சில் 57.2 ஓவர்கள் (134 ரன்), 78 (234), 54.1 (168), 55.2 (182), 47 (187), 48 (181), 50.5 (196) என ஒரு முறை கூட 80 ஓவர்கள் கூட தாக்குப் பிடித்தது இல்லை. நேற்று 8வது இன்னிங்சில் 95 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தது.

குல்தீப் ‘100’

நேற்று அம்ரிசை அவுட்டாக்கிய இந்தியாவின் குல்தீப் யாதவுக்கு சர்வதேச அரங்கில் 100வது விக்கெட்டாக அமைந்தது. இவர் 5 டெஸ்ட் (18 விக்.,), 29 ஒருநாள் (58), 12 ‘டுவென்டி–20’ (24) என, 46 போட்டிகளில் இந்த இலக்கை எட்டினார்.

* இவரது அறிமுகத்துக்குப் பின் தற்போதுள்ள இந்திய பவுலர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியதில் பும்ரா 88 (47 போட்டி) முன்னிலையில் உள்ளார். சகால் 76 (48 ல்), அஷ்வின் 68 (23 ல்), புவனேஷ்வர் 68 (50 ல்) விக்கெட் சாய்த்தனர்.

தாகூர் காயம்

சமீபத்திய ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட நாடு திரும்பினார் ஷர்துல் தாகூர். பின் விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கினார்.

இதையடுத்து 2016க்குப் பின் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றார். முதன் முறையாக நேற்று அறிமுகம் ஆனார். 1.4வது ஓவரை வீசிய போது வலது தொடைப்பகுதியில் வலி ஏற்பட்டது. தொடர்ந்து அதிகரிக்க 10 பந்து மட்டும் வீசிய நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார். நேற்று முழுவதும் இவர் மைதானத்துக்கு வரவில்லை. பிறகு இவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பொறுத்து தொடர்ந்து போட்டியில் பங்கேற்பது தெரியவரும்.

கோஹ்லிக்கு முத்தம்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாட்டில் குறை இருப்பது நேற்றும் வெளிப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் முதல் நாளில் மைதானத்துக்குள் புகுந்த ரசிகர்கள் கோஹ்லியுடன் ‘செல்பி’ எடுத்துச் சென்றனர்.

நேற்று இரண்டாவது டெஸ்டிலும் இது தொடர்ந்தது. 15 ஓவர்கள் முடிந்த நிலையில் அஷ்வின் தனது 6வது ஓவரை வீசத் தயாரானார். அப்போது திடீரென மைதானத்துக்குள் வந்த ரசிகர் ஒருவர், கோஹ்லியுடன் ‘செல்பி’ எடுத்தார். பின் அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் தர முயற்சித்தார். பிறகு உள்ளே வந்த போலீசார் ரசிகரை அப்புறப்படுத்தினர். இவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?