Advertisement


கவாஜா சதம்: தப்பியது ஆஸி.,

அக்டோபர் 11, 2018.
 Comments  
 


Khawaja, australia cricket team
 

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் உஸ்மான் கவாஜா சதம் கடந்து கைகொடுக்க, தோல்வியின் பிடியில் தப்பிய ஆஸ்திரேலிய அணி ‘டிரா’ செய்தது.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் துபாயில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 482, ஆஸ்திரேலியா 202 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பின், 462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி 4ம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா (50), ஹெட் (34) அவுட்டாகாமல் இருந்தனர்.

கவாஜா அசத்தல்

நேற்று, 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்த போது முகமது ஹபீஸ் பந்தில் ஹெட் (72) அவுட்டானார். அபாரமாக ஆடிய உஸ்மான் கவாஜா சதம் கடந்தார். மார்னஸ் (13) நிலைக்கவில்லை.

கேப்டன் இன்னிங்ஸ்

பின் இணைந்த கேப்டன் டிம் பெய்னே, கவாஜா ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இவர்களை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர். பொறுப்பாக ஆடிய பெய்னே தன்பங்கிற்கு அரைசதமடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்த போது யாசிர் ஷா ‘சுழலில்’ கவாஜா (141 ரன், 302 பந்து) சிக்கினார். தொடர்ந்து அசத்திய யாசிர் ஷா பந்தில் மிட்சல் ஸ்டார்க் (1), பீட்டர் சிடில் (0) அவுட்டாகினர்.

கடைசி ஓவரில் 2 விக்கெட் மீதமிருந்த நிலையில் சாமர்த்தியமாக ஆடிய கேப்டன் பெய்னே, தோல்வியின் பிடியிலிருந்து அணியை மீட்டார். ஒரு பந்து மீதமிருந்த நிலையில் இரு அணியினரும் போட்டியை ‘டிரா’ செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 362 ரன்கள் எடுத்திருந்தது. பெய்னே (61), நாதன் லியான் (5) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 4, முகமது அபாஸ் 3 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0–0 என சமநிலையில் உள்ளது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 16ல் அபுதாபியில் துவங்குகிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?