Advertisement


26 ரன்னில் சுருண்டது சீனா

அக்டோபர் 11, 2018.
 Comments [1]  
 


cricket, china team
 

கோலாலம்பூர்: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தகுதிச் சுற்றில் பேட்டிங்கில் சொதப்பிய சீனா, மீண்டும் 26 ரன்னில் சுருண்டது. அபாரமாக ஆடிய நேபாளம் அணி 11 பந்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில், வரும் 2020ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதன் ஆசிய அணிகளுக்கான ‘பி’ பிரிவு தகுதிச் சுற்று மலேசியாவில் நடக்கிறது. கோலாலம்பூரில் நடந்த லீக் போட்டியில் சீனா, நேபாளம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நேபாளம் அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

முதலில் ‘பேட்டிங்’ செய்த சீன அணி 13 ஓவரில் 26 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. சீனா சார்பில் ஹாங் ஜியாங் யான் அதிகபட்சமாக 11 ரன் எடுத்தார். ஏழு பேர் ‘டக்–அவுட்’ ஆகினர். நேபாளம் சார்பில் லலித் ராஜ்பான்ஷி, சந்தீப் லேமச்சேன், பசந்த் ரெக்மி தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய நேபாளம் அணி 1.5  ஓவரில் (11 பந்து) விக்கெட் இழப்பின்றி 29 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பிரதீப் ஆய்ரி (4), பினோத் பண்டாரி (24) அவுட்டாகாமல் இருந்தனர். சீன அணி, 2வது முறையாக 26 ரன்னில் சுருண்டது. சமீபத்தில் (அக். 6) சிங்கப்பூர் அணிக்கு எதிரான தகுதிச் சுற்றுப் போட்டியில் 26 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
srinivasan one week ago | Report abuse
இன்னும் 5 ஆண்டுகளில் சீன அணி சாம்பியன். அவர்கள் பணத்திற்காக விளையாடுபவர்கள் இல்லை




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?