Advertisement


தாகிர் ‘சுழல்’ ஜாலம்: தென் ஆப்ரிக்கா வெற்றி

அக்டோபர் 10, 2018.
 Comments  
 


tahir, south africa match
 

ஈஸ்ட் லண்டன்: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஜிம்பாப்வே அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. 

முதல் போட்டி ஈஸ்ட் லண்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (5), கிஹான் (2) மோசமான துவக்கம் தந்தனர். கேப்டன் டுபிளசி 34 ரன்களில் அவுட்டானார். அறிமுக வீரர் ரசி வான் டிர் (56) அரை சதம் கடந்தார். மில்லர் (39) ஓரளவு கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது.

பின், களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இம்ரான் தாகிர் அதிர்ச்சி அளித்தார். இவரது சுழற்பந்துவீச்சில் சிபாபா (3), கேப்டன் ஹாமில்டன் மசகட்சா (1) சிக்கினர். ஜூனியர் டாலா பந்தில் பிரண்டன் டெய்லர் (19) அவுட்டானார். தொடர்ந்து ‘சுழல்’ வேட்டை நடத்திய தாகிர், சிகும்பராவை டக் அவுட்டாக்கி ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்தினார். பீட்டர் மூர் (44) மட்டும் ஆறுதல் தந்தார். 

முடிவில், ஜிம்பாப்வே அணி 17.2 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக தாகிர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?