Advertisement


ரிஷாப் எதிர்பார்ப்பு: இன்று இந்திய அணித்தேர்வு

அக்டோபர் 10, 2018.
 Comments  
 


Rishabh Pant, india, west indies
 

ஐதராபாத்: ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது. கோஹ்லிக்கு ஓய்வு தரப்படுமா, இளம் விக்கெட்கீப்பர் ரிஷாப்பிற்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் 21ல் கவுகாத்தியில் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான முதல் 3 போட்டி அல்லது 5 போட்டிக்கும் வீரர்கள் தேர்வு இன்று ஐதராபாத்தில் நடக்கிறது.

தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து என அடுத்தடுத்த தொடரில் விளையாடினார் கேப்டன் கோஹ்லி. இவருக்கு சமீபத்திய ஆசிய கோப்பையில் ஓய்வு தரப்பட, ரோகித் சர்மா அணியை வழிநடத்தினார். 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோஹ்லி பங்கேற்றார். ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு தர வாய்ப்பு அதிகம். கோஹ்லி இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். அனுபவ வீரரான தோனியின் ‘கீப்பிங்’ திறமை குறித்து சந்தேகம் இல்லை. 

பேட்டிங்கில்தான் இவரது பங்களிப்பு போதுமானதாக இல்லை. களமிறங்கிய கடந்த 10 ஒரு நாள் போட்டியில் ஒன்றில் கூட அரை சதம் அடிக்கவில்லை.

ரிஷாப் வாய்ப்பு

இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், 21, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்டில் 92 ரன் எடுத்தார். இதனால் பேட்ஸ்மேனாக ரிஷாப்பிற்கு வாய்ப்பு தரப்படலாம் எனத்தெரிகிறது. இவர் அணியில் அறிமுகமானால், தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைக்காது. கேதர் ஜாதவ் காயத்தால் (தொடை பின்பகுதி) அவதிப்படுகிறார். ஆசிய கோப்பையில் விளையாடிய ராயுடு இடத்தை தக்க வைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ஜடேஜா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வில் உள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர், பும்ரா மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளனர். ஆசிய கோப்பையில் கவனம் ஈர்த்த ஜடேஜாவை மீண்டும் காணலாம். இரட்டை ‘சுழல்’ வீரர்களான குல்தீப், சகால் இடத்திற்கு சந்தேகம் இல்லை.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?