Advertisement


சேவக்– பிரித்வி ஒப்பிடலாமா: என்ன சொல்கிறார் காம்பிர்

அக்டோபர் 10, 2018.
 Comments  
 


Prithvi Shaw, virender sehwag, india
 

மும்பை: ‘‘சேவக் 100 டெஸ்டில் விளையாடி உள்ளார். பிரித்வி தற்போதுதான் கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கி உள்ளார். இருவரையும் ஒப்பிட முடியாது,’’ என, இந்திய அணியின் காம்பிர் தெரிவித்தார்.

இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா, 18. இந்த ஆண்டில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை அணியை திறம்பட வழிநடத்தி கோப்பை வென்று தந்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்டில் அறிமுகமான இவர், சதம் கடந்து அசத்தினார். இவரை, முன்னாள் துவக்க வீரர் சேவக்குடன் ஒப்பிடுகின்றனர்.

இது குறித்து காம்பிர் கூறியது: எந்த ஒரு வீரரையும் மற்றவருடன் ஒப்பிட வேண்டாம். தற்போதுதான், பிரித்வி கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கி உள்ளார பிரித்வி. இவர் போக வேண்டிய துாரம் அதிகம். சேவக் 100 டெஸ்ட் போட்டிக்கு மேல் விளையாடி விட்டார். அதற்குள், இருவரையும் ஒப்பிடுவதை ஏற்க முடியாது. இரண்டு வீரர்களும் வெவ்வேறான அணுகுமுறை கொண்டவர்கள். பிரித்வி திறமையான வீரர் என்பதால்தான், சதம் அடித்து நம்பிக்கையுடன் துவக்கி உள்ளார். இவருக்கு இனிதான் சவால் காத்திருக்கிறது.

தோனிக்கு ஓய்வா

தோனிக்குப்பதில் ஒரு நாள் அணியில் விக்கெட்கீப்பராக ரிஷாப்பை களமிறக்கலாமா என கேள்வி எழுப்புகின்றனர். இம்மாதிரியான விஷயத்தில் சரியான தருணம், தவறான தருணம் என எதுவும் கிடையாது. வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில்தான் தேர்வு இருக்கும். வயது பற்றி கணக்கு எல்லாம் தேவைப்படாது. சிறப்பாக விளையாடினால் அணியில் நீடிக்கலாம்.

மிரட்டும் ஆஸி.,

அடுத்த மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. ஸ்மித், வார்னர் என்ற ஆபத்தான பேட்ஸ்மேன்கள் தடையில் இருந்தாலும் ஆஸ்திரேலிய அணி பலமாகவே உள்ளது. இவர்களை சொந்த மண்ணில் எதிர்கொள்வது எளிதானதல்ல. ஷான் மார்ஷ், பின்ச் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். பவுலர்களை பொறுத்தவரை உள்ளூரில் நிலவும் தட்பவெப்பநிலையை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் சொந்த மண்ணில் எப்படிப்பட்ட எதிரணியையும் அச்சுறுத்தும் திறன் படைத்தவர்கள். உலகத்தரமான ‘சுழல்’ வீரர் லியான் நெருக்கடி தர வாய்ப்புள்ளது.

இவ்வாறு காம்பிர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?