Advertisement


10 பந்தில் வென்ற மலேசியா: 20 ஓவரில் ‘காமெடி’

அக்டோபர் 10, 2018.
 Comments  
 


cricket, Malaysia team
 

கோலாலம்பூர்: ஆஸ்திரேலியாவில், வரும் 2020ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. 

இதன் ஆசிய அணிகளுக்கான தகுதிச் சுற்று மலேசியாவில் நடக்கிறது. லீக் போட்டியில் மலேசியா, மியான்மர் அணிகள் மோதின. 

பவன்தீப் சிங் ‘சுழலில்’ மியான்மரின் லின் து, கின் அய், நயிங் டுன், பயிங் டானு, துயா அயுங் ‘டக்–அவுட்’ ஆனார்கள். கேப்டன் லின் அயுங் (2), லின் ஓ (1), கோ அயுங் (3*) மட்டும் ரன் எடுத்தனர். 

மியான்மர் அணி 10.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 9 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி தடைபட்டது. பவன்தீப் சிங் 5 விக்கெட் கைப்பற்றினார்.

பின் மீண்டும் போட்டி துவங்கியதும் 8 ஓவரில் 6 ரன் எடுத்தால் வெற்றி என ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் மலேசிய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மலேசியாவின் அன்வர் அருதின், ஷபிக் ஷாரிப் ‘டக்–அவுட்’ ஆகினர்.  பொறுப்பாக ஆடிய சுஹான் அலகரத்தினம் (7*), ஷர்வின் முனியாண்டி (4*) வெற்றியை உறுதி செய்தனர். மலேசிய அணி 1.4 ஓவரில்(10 பந்தில்) 2 விக்கெட்டுக்கு 11 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மியான்மர் சார்பில் பயிங் டானு 2 விக்கெட் வீழ்த்தினார்.

8 ‘டக்’

இப்போட்டியில் மொத்தம் 8 பேர் (மியான்மர் 6 + மலேசியா 2) ‘டக்–அவுட்’ ஆகினர். எந்த ஒரு வீரரும் இரட்டை இலக்க ரன் எடுக்கவில்லை. ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடிக்கப்பட்டது. இரு அணிகள் சார்பில் மொத்தம் 20 ரன் மட்டுமே எடுக்கப்பட்டன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?