Advertisement


ஆசிய ‘பாரா’: ஹர்விந்தர் அசத்தல்

அக்டோபர் 10, 2018.
 Comments  
 


Harvinder, Asian Para Games, gold
 

ஜகார்த்தா: ஆசிய பாரா விளையாட்டு வில்வித்தையில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு நடக்கிறது. இதன் ஆண்களுக்கான டபிள்யு2/எஸ்டி வில்வித்தை ‘ரிகர்வ்’ பிரிவு பைனலில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், சீனாவின் சிஹா லிக்யு மோதினர். அபாரமாக செயல்பட்ட ஹர்விந்தர் சிங் 6–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றினார்.

மோனு வெள்ளி

ஆண்களுக்கான வட்டு எறிதலில் (எப் 11 பிரிவு) இந்தியாவின் மோனு 35.89 மீ., துாரம் எறிந்து வெள்ளி வென்றார். நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் விஜய் குமார் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். குண்டு எறிதலில் (எப் 46 பிரிவு) இந்திய வீரர் முகமது யாசிர் 14.22 மீ., துாரம் எறிந்து வெண்கலம் கைப்பற்றினார்.

பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினாபென், சோனல்பென் ஜோடி, இந்தோனேஷியாவின் ஆஷ்யாத், பாட்டர்வதி ஜோடியை சந்தித்தது. இதில் 4–11, 12–14 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய ஜோடி வெள்ளியை வசப்படுத்தியது.

சுதிர் வெண்கலம்

பெண்களுக்கான செஸ் போட்டியில் இந்தியாவின் ஜென்னிதா வெள்ளி கைப்பற்றினார். அணிகளுக்கான பிரிவில் இந்தியாவின் ஜென்னிதா– பிரேமா ஜோடி வெண்கலம் வென்றது. பெண்கள் பி2/பி3 செஸ் போட்டியில் முர்னாலி, மேகா, டிஜான் அடங்கிய இந்திய அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான வலுதுாக்குதல் 80 கி.கி., பிரிவில் இந்தியாவின் சுதிர் 192 கி.கி., துாக்கி வெண்கலம் வென்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?