Advertisement


இறுக்கியது பாக்., :சறுக்கியது ஆஸி.,

அக்டோபர் 09, 2018.
 Comments  
 


bilal asif, pakistan, test match
 

துபாய்: முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அறிமுக சுழற்பந்துவீச்சாளர் பிலால் 6 விக்கெட் வீழ்த்த, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணி வலுவான முன்னிலை பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி துபாயில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 482 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது.

42 ரன்...9 விக்.,:

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பாக விளையாடிய கவாஜா, பின்ச் அரை சதம் கடந்தனர். பின்ச் 62 ரன்கள் எடுத்தார். பின் அறிமுக பிலால் ஆசிப் மிரட்ட, ஆஸ்திரேலிய ‘பேட்டிங்’ சரிந்தது. இவரது ‘சுழல்’ வலையில் ஷான் மார்ஷ் (7), கவாஜா (85) சிக்கினர். தொடர்ந்து பிடியை இறுக்கிய இவரது 86வது ஓவரில் ஹெட், மார்னஸ் ‘டக்’ அவுட்டாகினர். கேப்டன் பெய்னேவை (7) வெளியேற்றிய பிலால் 5 விக்கெட் சாய்த்தார். அபாஸ் ‘வேகத்தில்’ ஸ்டார்க் (0), சிடில் (10) சிக்கினர். கடைசியில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டை பறிகொடுத்தது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பிலால் ஆசிப் 6 விக்கெட் கைப்பற்றினார்.

280 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோதும், பாகிஸ்தான் அணி ‘பாலோ ஆன்’ தராமல் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ஹாலந்து ‘சுழலில்’ ஹபீஸ் (17), அசார் அலி (0) சிக்கினர். ‘நைட் வாட்ச்மேன்’ பிலால் டக் அவுட்டானார். ஆட்ட நேர முடிவில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து, 325 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இமாம் (23) அவுட்டாகாமல் இருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?