Advertisement


ஜொலிக்கும் ஜடேஜா: மீண்டு வந்தது எப்படி

அக்டோபர் 09, 2018.
 Comments  
 


jadeja, india, test, all rounder
 

ஐதராபாத்: டெஸ்ட் அரங்கில் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராக எழுச்சி பெற்றுள்ளார் ஜடேஜா. 

இந்திய டெஸ்ட் அணியின் ‘இரட்டைக் சுழல்’ துப்பாக்கிகள் அஷ்வின், ஜடேஜா. பேட்டிங்கை பொறுத்தவரையில் அஷ்வின் டெஸ்ட் அரங்கில் 4 சதம் அடித்துள்ளார். அதேநேரம் முதல் தர போட்டிகளில் ஜடேஜா மூன்று முறை ‘டிரிபிள்’ சதம் (முச்சதம்) அடித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் அஷ்வினை விட (29.43 ரன்) ஜடேஜாவின் (33.21) ரன் சராசரி தான் அதிகமாக உள்ளது. 

அஷ்வின் நம்பிக்கை

இருப்பினும் கடந்த சில தொடர்களில் பேட்டிங்கில் அஷ்வின் மீது தான் அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்தது. இவர், ஜடேஜாவை விட முன்னதாக களமிறங்குவார். அஷ்வின் விளையாடிய 90 இன்னிங்சில் 15 முறை 6, 15 முறை 7வது இடத்தில் பேட்டிங் செய்தார். ஜடேஜா 3 முறை மட்டும் தான் 6 வதாக வந்தார். 53 இன்னிங்சில் 8வது வீரராகத் தான் பேட்டிங் செய்துள்ளார். 

கடைசியாக அஷ்வினுடன் இணைந்து பங்கேற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில் கூட ஜடேஜா 9வது இடத்தில் தான் பேட்டிங் செய்தார். 

திடீர் மாற்றம்

திடீரென எல்லாம் மாறியது. ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் இடம் பிடித்தார் ஜடேஜா. 8வது இடத்தில் களமிறங்கி 206 நிமிடங்கள் களத்தில் நின்று 156 பந்துகளை சந்தித்து 86 ரன்கள் குவித்தார். பவுலிங்கிலும் 7 விக்கெட் (4+3) சாய்த்தார். 

இதில் ஜடேஜா வீழ்த்திய 7 விக்கெட்டுகளை விட அவரது 86 ரன்கள் தான் அதிகம் பேசப்பட்டது. டெஸ்ட் அரங்கில் சிறந்த ‘ஆல் ரவுண்டர்’ என்பதை நிரூபித்தார். 

முடிவுக்கு காரணம்

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்டில் அஷ்வினுக்கு முன்னதாக, ஜடேஜாவை பேட்டிங் செய்ய வந்தார். அணி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு ஓவல் டெஸ்ட் தான் காரணம் என கூறப்படுகிறது. கடைசியில் சொந்த மண் பலமும் சேர்ந்து கொள்ள டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக ஜடேஜா சதம் (132 பந்து, 100 ரன்) எட்டினார். இருப்பினும் 2012ல் அறிமுகம் ஆனது முதல் இந்த ஆண்டு தான் குறைவான டெஸ்டில் (3) பங்கேற்றுள்ளார். சமீபத்திய இங்கிலாந்து தொடரின் லார்ட்ஸ் டெஸ்டில் கூட அஷ்வினுடன் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். 

வென்றது பொறுமை

இருப்பினும் பொறுமை காத்த ஜடேஜா, ஓவலில் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். தற்போது தவிர்க்க முடியாத ‘ஆல் ரவுண்டராக’ உருவெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:

களமிறங்கும் லெவன் அணியில் தொடர்ந்து இடம் பெறாத நிலையில், திடீரென வாய்ப்பு பெற்றால் நெருக்கடி ஏற்படத்தான் செய்யும். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து தொடரில் இந்த எண்ணத்தில் தான் இருந்தேன். கடைசி டெஸ்டில் இடம் பிடித்ததும் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டேன்,’’ என்றார். 

219

ஜடேஜா இந்த ஆண்டு களமிறங்கிய நான்கு டெஸ்ட் இன்னிங்சில் 20, 86, 13, 100 என மொத்தம் 219 ரன்கள் எடுத்தார். இதுவரை பங்கேற்ற 38 டெஸ்டில் 1 சதம், 9 அரைசதம் உட்பட 1,395 ரன்கள் எடுத்துள்ளார். 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?