Advertisement


வயது சிக்கலில் ஐ.எஸ்.எல்., வீரர்

அக்டோபர் 09, 2018.
 Comments  
 


Gourav Mukhi, isl soccer
 

புதுடில்லி: ஐ.எஸ்.எல்., தொடரில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமை பெற்ற கவுரவ் முகி, வயது சிக்கலில் சிக்கியுள்ளார்.

கடந்த 2015ல் நடந்த தேசிய சப்–ஜூனியர் (15 வயதுக்குட்பட்ட) கால்பந்து தொடரில் ஜார்க்கண்ட், கோவாவை (8–3) வீழ்த்திய கோப்பை வென்றது. ஜார்க்கண்ட் அணியில் கவுரவ் முகி உட்பட 5 கூடுதல் வயது கொண்ட வீரர்கள் பங்கேற்றது தெரியவர, கோப்பை பறிக்கப்பட்டது.

இதில் கவுரவ் முகிக்கு 2 ஆண்டு தடை கிடைத்தது. தற்போது 2018–19 ஐ.எஸ்.எல்., தொடரில் 2002ல் பிறந்ததாக சான்றிதழ் கொடுத்து, 16 வயது வீரராக ஜாம்ஷெட்பூர் அணியில் அறிமுகம் ஆனார். பெங்களூருவுக்கு எதிராக அசத்த, இத்தொடரில் கோல் அடித்த மிக இளம் வீரர் என பெருமை பெற்றார்.

ஆனால் 2015ல் சர்ச்சை ஏற்பட்ட போது பாஸ்போர்ட்டில் இவரது பிறந்த ஆண்டு 1999 ஆக இருந்தது. இதுகுறித்த பதிவுகளை அகில இந்திய கால்பந்து சங்கம் (ஏ.ஐ.எப்.எப்.,) சரியாக பராமரிக்கவில்லை.

தற்போது மீண்டும் சர்ச்சை கிளம்பியதால் கவுரவ் முகி குறித்து ஏ.ஐ.எப்.எப்., விசாரிக்க முடிவு செய்துள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?