Advertisement


‘யூத்’ ஒலிம்பிக்: மின்னிய மனு

அக்டோபர் 09, 2018.
 Comments  
 


Manu Bhaker, youth olympic
 

பியுனஸ் ஏர்ஸ்: ‘யூத்’ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று வரலாறு படைத்தார் ஜெரிமி. துப்பாக்கி சுடுதலில் மனு பாகர் தங்கம் வென்றார்.

அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் ஏர்சில் ‘யூத்’ ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 62 கி.கி., எடைப்பிரிவு பளுதுாக்குதல் பிரிவில் இந்தியாவின் ஜெரிமி லால்ரினுங்கா பங்கேற்றார். அபாரமாக செயல்பட்ட இவர் ‘ஸ்னாட்ச்’ (124 கி.கி.,) மற்றும் ‘கிளீன் அன்ட் ஜெர்க்’ (150 கி.கி.,) என இரண்டையும் சேர்த்து மொத்தம் 274 கி.கி., எடை துாக்கி தங்கத்தை தட்டிச்சென்றார். இதன் மூலம், ‘யூத்’ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றுதந்தார். மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெரிமி, 15. சமீபத்தில் நடந்த ஆசிய ‘யூத்’ (வெள்ளி), ஆசிய ஜூனியர் (வெண்கலம்) சாம்பியன்ஷிப்பில் அசத்தி இருந்தார்.

மனு பாகர் தங்கம்

பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ துப்பாக்கி சுடுதல் தகுதிச்சுற்றில் 576 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் மனு பாகர் இரண்டாவது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். இதில் அசத்திய இவர் 236.5 புள்ளியுடன் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதன் மூலம், ‘யூத்’ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற பெருமை பெற்றார். இந்த ஆண்டில் மட்டும் இவர் தொடர்ந்து தனிநபர் பிரிவில் (உலக கோப்பை, காமன்வெல்த், ‘யூத்’ ஒலிம்பிக்) கைப்பற்றிய மூன்றாவது தங்கம் இது. இப்பிரிவில் வெள்ளி, வெண்கலம் முறையே ரஷ்யாவின் இயனா, ஜயார்ஜியாவின் நிகோ வென்றனர்.

ஹாக்கியில் அபாரம்

பெண்களுக்கான பளுதுாக்குதல் 48 கி.கி., பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்னேகா சோரன் 5வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

டேபிள் டென்னிஸ் லீக் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் அர்ச்சனா கமாத் 4–2 என மலேசியாவின் ஜாவினை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் சக வீராங்கனை மானவ் தக்கார் 4–1 என சுலோவாகியாவின் அலெக்சாண்ட்ராவை தோற்கடித்தார்.

ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 9–1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வென்றது.

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?