Advertisement


சொந்தமண்ணில் அசத்தும் இந்தியா

அக்டோபர் 08, 2018.
 Comments [3]  
 


India, Test Cricket, Home Records
 

ஐதராபாத்: சொந்தமண்ணில் டெஸ்டில் விளையாடுவது இந்திய வீரர்களுக்கு சந்தோஷமான விஷயம். கோஹ்லி, புஜாரா, அஷ்வின், ஜடேஜா உள்ளிட்டோர் தனி சாம்ராஜ்யமே நடத்துகின்றனர். வெஸ்ட் இணடீசிற்கு எதிரான ஐதராபாத் டெஸ்டில் வெற்றி அல்லது ‘டிரா’ செய்யும் பட்சத்தில், இந்திய அணி உள்ளூரில் தொடர்ந்து பத்தாவது கோப்பை கைப்பற்றலாம்.

டெஸ்ட் அரங்கில் இந்திய அணியை சொந்தமண்ணில் அசைப்பது எளிதல்ல. இங்கு 2013, ஜனவரியில் இருந்து நடந்த 28 டெஸ்டில் இந்தியா 22ல் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் ‘டிரா’ ஆகின. 2017 புனே டெஸ்டில் மட்டும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 87.5. இது ஆஸ்திரேலிய அணியைவிட அதிகம். சொந்தமண்ணில் ஆஸ்திரேலியா விளையாடிய 27 டெஸ்டில் 20 வெற்றி, 2 தோல்வி (5 ‘டிரா’) அடைந்தது. இதன் சராசரி 83.33.

தென் ஆப்ரிக்கா (75), நியூசிலாந்து (72) அணிகள் அடுத்த இரு இடங்களில் உள்ளன. இந்த 5 ஆண்டுகளில் அதிக டெஸ்ட் விளையாடிய இங்கிலாந்து அணியின் (42ல் 26 வெற்றி, 11 தோல்வி, 5 ‘டிரா’) வெற்றி சதவீதம் 67.9 ஆக உள்ளது.

பேட்டிங் பலம்: இந்தியாவில் விளையாடுவது என்பது மற்ற அணிகளுக்கு பெரும் கடினம் தான். ஏனெனில் கேப்டன் கோஹ்லி மூன்று வித கிரிக்கெட்டிலும் ரன் குவிக்கிறார். சொந்தமண்ணில் கடந்த 26 டெஸ்டில் 2545 ரன்கள் எடுத்துள்ளார். 9 டெஸ்டில் ரோகித் சர்மா 769 ரன் (சராசரி 85.44) குவித்துள்ளார். 28 டெஸ்டில் புஜாரா 2477 ரன்கள் எடுத்தார். இதில் கோஹ்லி, புஜாராவின் ரன் சராசரி 68.78, 60.41 ஆக உள்ளது.

‘சூப்பர்’ சுழல்: பவுலிங்கை பொறுத்தவரையில் அஷ்வின், ஜடேஜா கூட்டணி சிம்ம சொப்பனமாக திகழ்கிறது. கடந்த 5 ஆண்டில் அனைத்து டெஸ்டிலும் (28) களமிறங்கிய அஷ்வின், 177 விக்கெட்டுகள் சாயத்துள்ளார். 26 டெஸ்டில் ஜடேஜா 138 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தவிர அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஜடேஜா (910 ரன்) 5வது இடத்தில் உள்ளது கூடுதல் பலம்.

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்றால், இந்திய அணி கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 10வது டெஸ்ட் கோப்பை கைப்பற்றலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
MyNameIsNobody one week ago | Report abuse
உள்ளூர் யானை அசலூர் பூனை. மியாவ்..


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
metturaan one week ago | Report abuse
சிரிப்பு சிரிப்பா... வருது சார் .. எங்க வீட்டுல நாந்தான் கில்லி... இதுல சந்தேகமே வேண்டாம் ... வெளிநாட்டுல சாதிச்சு அவன் ஊர்ல அவனை ஜெயிச்சு கோப்பையைக்கொண்டுவந்தா அது தான் சார் கெத்து


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 2 weeks ago | Report abuse
திறமை நன்றாகவே பளிச்சிடுகிறது




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?