Advertisement


ஹாரிஸ் சோகைல் சதம்

அக்டோபர் 08, 2018.
 Comments  
 


Australia, Pakistan, Dubai Test Cricket, Haris Sohail
 

துபாய்: முதல் டெஸ்டில் ஹாரிஸ் சோகைல் சதம் கைகொடுக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் துபாயில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு ஆசாத் ஷபிக் (80) அரைசதம் கடந்தார். பாபர் ஆசம் (4) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய ஹாரிஸ் சோகைல் (110) சதம் அடித்தார். கேப்டன் சர்பராஸ் அகமது (15) ‘ரன்–அவுட்’ ஆனார். பிலால் ஆசிப் (12), யாசிர் ஷா (3) நிலைக்கவில்லை.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 482 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. வாகாப் ரியாஸ் (7) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் சிடில் 3, நாதன் லியான் 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்திருந்தது. ஆரோன் பின்ச் (13), உஸ்மான் கவாஜா (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?