Advertisement


சிந்து, செய்னாவுக்கு ‘ஜாக்பாட்’: ரூ. 80 லட்சத்துக்கு ஒப்பந்தம்

அக்டோபர் 08, 2018.
 Comments  
 


Premier Badmnton League, Players Auctions, Sindhu, Saina, Srikanth, Marin Carolina, Victor
 

புதுடில்லி: பிரிமியர் பாட்மின்டன் லீக் தொடருக்கான ஏலத்தில் இந்தியாவின் சிந்து, செய்னா, ஸ்ரீகாந்த் தலா ரூ. 80 லட்சத்திற்கு ஒப்பந்தமாகினர்.

பிரிமியர் பாட்மின்டன் லீக் (பி.பி.எல்.,) தொடரின் 4வது சீசன் வரும் டிச. 22ல் துவங்குகிறது. பைனல், பெங்களூருவில் அடுத்த ஆண்டு ஜன. 13ல் நடக்கவுள்ளது. இதில் டில்லி, மும்பை, ஐதராபாத், அவாதே வாரியர்ஸ், சென்னை, பெங்களூரு, ஆமதாபாத், வடகிழக்கு மற்றும் புதிய வரவான புனே என, 9 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் டில்லியில் நடந்தது. இதில் 23 நாடுகளை சேர்ந்த 145 பேர் ஏலம் விடப்பட்டனர்.. இந்தியாவின் சிந்து, செய்னா நேவல், ஸ்ரீகாந்த், பிரனாய், ஸ்பெயினின் மரின் கரோலினா, டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் ஏலத்தில் இடம் பெற்றிருந்தனர்.

இந்திய வீராங்கனை சிந்து, ரூ. 80 லட்சத்திற்கு ‘நடப்பு சாம்பியன்’ ஐதராபாத் அணியில் ஒப்பந்தமானார். இவர், கடந்த 2 சீசனில் சென்னை அணிக்காக விளையாடினார். முதல் சுற்றில் விலை போகாத இந்திய வீராங்கனை செய்னா நேவல், 2வது சுற்றில் ரூ. 80 லட்சத்திற்கு வடகிழக்கு வாரியர்ஸ் அணியில் இடம் பிடித்தார். ஸ்பெயின் வீராங்கனை மரின் கரோலினாவை, புதிய வரவான புனே அணி ரூ. 80 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது. உலகின் ‘நம்பர்–3’ டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சன், ரூ. 80 லட்சத்திற்கு ஆமதாபாத் அணிக்கு தேர்வானார். இந்திய வீரர் பிரனாய், ரூ. 80 லட்சத்திற்கு டில்லி அணியில் இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ரூ. 80 லட்சத்திற்கு பெங்களூரு அணியில் இணைந்தார்.

இந்தியாவை சேர்ந்த இரட்டையர் பிரிவு வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா, ரூ. 32 லட்சத்திற்கு அவாதே வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இந்திய வீரர் சத்விக்சாய்ராஜ், ரூ. 52 லட்சத்திற்கு ஆமதபாத் அணியில் ஒப்பந்தமானார். இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ் அட்காக், ரூ. 54 லட்சத்திற்கு சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவின் காஷ்யப் சென்னை அணியில் இடம் பிடித்தார். இளம் இந்திய வீரர் லக்சயா சென், புனே அணியில் ரூ. 11 லட்சத்திற்கு தேர்வானார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?