Advertisement


விஜய் ஹசாரே: பஞ்சாப் வெற்றி

அக்டோபர் 08, 2018.
 Comments  
 


Vijay Hazare Trophy, Cricket, Punjab, Karnataka, Anmolpreet Singh
 

பெங்களூரு: கர்நாடகா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் அன்மோல்பிரீத் சிங் சதம் கடந்து கைகொடுக்க பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) தொடருக்கான லீக் போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த ‘ஏ’ பிரிவு போட்டியில் கர்நாடகா, பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த கர்நாடகா அணிக்கு ரவிக்குமார் சமர்த் (54), ஷரத் (70) நல்ல துவக்கம் தந்தனர். கருண் நாயர் (28) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய கேப்டன் மணிஷ் பாண்டே (67) தன்பங்கிற்கு அரைசதமடித்தார். ஸ்ரேயாஸ் கோபால் (37) ஆறுதல் தந்தார்.

கர்நாடகா அணி 48.2 ஓவரில் 296 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. பஞ்சாப் அணி சார்பில் சித்தார்த் கவுல் 5 விக்கெட் கைப்பற்றினார்.

அன்மோல்பிரீத் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு சுப்மன் கில் (77) நல்ல துவக்கம் தந்தார். மறுமுனையில் அசத்திய மற்றொரு துவக்க வீரர் அன்மோல்பிரீத் சிங் (138) சதம் கடந்தார். யுவராஜ் சிங் (38), கேப்டன் மன்தீப் சிங் (30) கைகொடுத்தனர்.

பஞ்சாப் அணி 48.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டில்லி வெற்றி

டில்லியில் நடந்த ‘பி’ பிரிவு போட்டியில் டில்லி, சட்டீஸ்கர் அணிகள் மோதின. டில்லி அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய சட்டீஸ்கர் அணி 45.1 ஓவரில் 201 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ 44 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?