Advertisement


கெய்ல் வாய்ப்பு மறுப்பு ஏன்: வெ. இண்டீஸ் அணி அறிவிப்பு

அக்டோபர் 08, 2018.
 Comments  
 


Chris Gayle, West Indies Team, India One Day and T20 Series, Cricket
 

புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடரில் இடம் பெற கெய்ல் மறுத்து விட்டார். தவிர டுவைன் பிராவோ, சுனில் நரைனும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. 

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 21ம் தேதி கவுகாத்தியில் நடக்கவுள்ளது. 

இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சீனியர்’ கிறிஸ் கெய்ல், சொந்த காரணங்களுக்காக இந்திய தொடரில் பங்கேற்க மறுத்து விட்டார். இவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கவுள்ள ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக், ‘டி–10’ தொடர்களில் பங்கேற்க உள்ளார். 

அதேநேரம் சொந்தமண்ணில் இங்கிலாந்து தொடர் மற்றும் 2019 உலக கோப்பை தொடரில் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார். ‘ஆல் ரவுண்டர்’ ரசல் காயம் காரணமாக, ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை. 

ஐ.பி.எல்., தொடரில் அசத்தும் டுவைன் பிராவோ, சுனில் நரைன் என இருவரும் ஒருநாள், ‘டுவென்டி–20’ அணியில் சேர்க்கப்படவில்லை. போலார்டு ‘டுவென்டி–20’ அணியில் மட்டும் சேர்க்கப்பட்டார். இதனால் வரும் உலக கோப்பை தொடருக்கான அணியில் பிராவோ, போலார்டு, நரைன் இடம் பெறுவார்களா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

சந்தர்பால் மகன்: இவர்களுக்குப் பதில் இந்திய வம்சாவளி வீரர் சந்தர்பால் மகன் ஹேம்ராஜ் துவக்க வீரராக அறிமுகம் ஆகவுள்ளார். ‘ஆல் ரவுண்டர்’ பேபியன் ஆலன், ஓஷேன் தாமஸ் புதுமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர். 

‘டுவென்டி–20’ அணிக்கு கார்லஸ் பிராத்வைட் கேப்டனாக செயல்படவுள்ளார். இந்த அணியில் டேரன் பிராவோ, போலார்டு சேர்க்கப்பட்டனர். 

அணி விவரம்

ஒருநாள் அணி

ஹோல்டர் (கேப்டன்), பேபியன் ஆலன், அம்ரிஸ், பிஷூ, சந்தர்பால் ஹேம்ராஜ், ஹெட்மயர், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், எவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஷ், கீமோ பால், ராவ்மன் பாவெல், கீமர் ரோச், சாமுவேல்ஸ், ஓஷேன் தாமஸ்.

‘டுவென்டி–20’ அணி

கார்லஸ் பிராத்வைட் (கேப்டன்), பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஹெட்மயர், எவின் லீவிஸ், ஒபட் மெக்காய், ஆஷ்லே நர்ஷ், கீமோ பால், காரி பியரே, போலார்டு, ராம்தின், ஆன்ட்ரூ ரசல், ரூதர்போர்டு, ஓஷேன் தாமஸ்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?