Advertisement


கோஹ்லி, பும்ரா ‘நம்பர்–1’

அக்டோபர் 08, 2018.
 Comments  
 


ICC One Day International Cricket Ranking, Virat Kohli, Bumrah
 

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி (பேட்டிங்), பும்ரா (பவுலிங்) ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கின்றனர்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி 884 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா, 842 புள்ளிகளுடன் ‘நம்பர்–2’ இடத்தில் நீடிக்கிறார். 

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 797 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், 700 புள்ளிகளுடன் ‘நம்பர்–3’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

‘ஆல்–ரவுண்டர்களுக்கான’ தரவரிசையில் ஆப்கானிஸ்தான் ‘சுழல்’ வீரர் ரஷித் கான், ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா, 14வது இடத்தில் உள்ளார்.

இந்தியா ‘நம்பர்–2’

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 122 புள்ளிகளுடன் ‘நம்பர்–2’ இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இங்கிலாந்து அணி (127 புள்ளி) உள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழக்கும் பட்சத்தில் இங்கிலாந்தின் முதலிடத்துக்கு ஆபத்து ஏற்படும். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றினால் இந்திய அணி ‘நம்பர்–1’ இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?