Advertisement


யூத் ஒலிம்பிக்: தேவி ‘வெள்ளி’

அக்டோபர் 08, 2018.
 Comments  
 


Thangjam Tababi Devi, Judo, Youth Olympic 2018
 

பியூனோ ஏர்ஸ்: யூத் ஒலிம்பிக் ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை தபாபி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அர்ஜென்டினாவின் பியூனோ ஏர்ஸ் நகரில், 3வது யூத் ஒலிம்பிக் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 44 கி.கி., எடைப்பிரிவு ஜூடோ போட்டியில் இந்தியாவின் தபாபி தேவி பங்கேற்றார். ‘ரவுண்டு–16’ போட்டியில் பூடானின் யங்சென் வாங்மோவை வீழ்த்திய தபாபி தேவி, காலிறுதியில் கொசோவோவின் எர்சா முமினோவிக்கை வீழ்த்தினார்.

அடுத்து நடந்த அரையிறுதியில் குரோஷியாவின் அனா விக்டோரிஜாவை தோற்கடித்த தபாபி தேவி, பைனலில் வெனிசுலாவின் மரியா ஜிமினசை எதிர்கொண்டார். இதில் தபாபி தேவி 0–11 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இவர் ஒட்டுமொத்த ஒலிம்பிக் (சீனியர், யூத்) வரலாற்றில் ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரானார்.

இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஆண்களுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் துஷார் மானே வெள்ளி வென்றிருந்தார்.

நடராஜ் ஏமாற்றம்: ஆண்களுக்கான 100 மீ., ‘பேக்ஸ்டிரோக்’ நீச்சல் போட்டியின் தகுதிச் சுற்றில் பந்தய துாரத்தை 56.75 வினாடியில் கடந்த இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் பந்தய துாரத்தை 56.48 வினாடியில் கடந்த இவர் 9வது இடம் பிடித்தார். ‘டாப்–8’ வீரர்கள் மட்டுமே பைனலுக்கு தகுதி பெற முடியும் என்பதால், அரையிறுதியோடு திரும்பினார்.

ஹாக்கியில் வெற்றி: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா, ஆஸ்திரியா அணிகள் மோதின. லால்ரிம்சியாமி (4, 17வது நிமிடம்), கேப்டன் சலிமா (5வது), மும்தாஜ் கான் (16வது) கோலடித்து கைகொடுக்க இந்திய அணி 4–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அடுத்து நடந்த  போட்டியில் இந்தியா, உருகுவே அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் லால்ரிம்சியாமி (1, 19வது நிமிடம்) 2 கோலடித்து கைகொடுத்தார்.

மெகுலி வெள்ளி: பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ துப்பாக்கி சுடுதலில் பங்கேற்ற இந்தியாவின் மெகுலி கோஷ், 248.0 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?