Advertisement


தமிழ் தலைவாஸ் வெற்றி: ‘புரோ’ கபடியில் கலக்கல்

அக்டோபர் 07, 2018.
 Comments [2]  
 


Tamil Thalaivas and Patna, pro kabaddi
 

சென்னை: ‘புரோ’ கபடி லீக் 6வது சீசனை தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் துவக்கியது. 

‘புரோ’ கபடி லீக் தொடரின் 6வது சீசன் நேற்று சென்னையில் துவங்கியது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ பாட்னா, தமிழ் தலைவாஸ், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 12 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. தமிழகத்தை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி, ‘பி’ பிரிவில் பாட்னா பைரேட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி., யோதா அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.

முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டன் அஜய் தாகூர் முதல் புள்ளி பெற்றுத் தந்தார். 

இது, இந்த சீசனில் பதிவான முதல் புள்ளி. அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி முதல் பாதி முடிவில் 26–8 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி ஆட்டநேர முடிவில் 42–26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணி சார்பில் கேப்டன் அஜய் தாகூர் 14 புள்ளிகள் பெற்றார். பாட்னா அணிக்கு பர்தீப் நார்வல் 11 புள்ளிகள் பெற்றுத் தந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Muthu 7 days ago | Report abuse
கபடி விளையாட்டையும் பற்றி எழுதியதர்க்கு தங்கள் பத்திரிக்கைகைக்கு மிகவும் நன்றி.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
samraj 7 days ago | Report abuse
தொட்டு பாரு நாங்க தாரு மாரு




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?