Advertisement


விஜய் ஹசாரே: தமிழகம் தோல்வி

அக்டோபர் 07, 2018.
 Comments  
 


Vijay Hazare Trophy, Cricket, Tamil Nadu, Jammu Kashmir, Vijay Shankar
 

சென்னை: ஜம்மு–காஷ்மீர் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி ஏமாற்றிய தமிழக அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பி.சி.சி.ஐ., சார்பில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. சென்னையில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜம்மு–காஷ்மீர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஜம்மு–காஷ்மீர் அணி கேப்டன் பர்வேஸ் ரசூல், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். மழையால் தலா 41 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

தமிழக அணிக்கு ஜெகதீசன் (6) ஏமாற்றினார். அபினவ் முகுந்த் (49), முரளி விஜய் (44), பாபா இந்திரஜித் (28) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் விஜய் ஷங்கர் (3), வாஷிங்டன் சுந்தர் (14), பாபா அபராஜித் (11) நிலைக்கவில்லை. முகமது (2), வருண் (3), ராஹில் ஷா (4) சொற்ப ரன்னில் வெளியேறினர்.

தமிழக அணி 39.4 ஓவரில் 168 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

ரசூல் அபாரம்: சுலப இலக்கை விரட்டிய ஜம்மு–காஷ்மீர் அணிக்கு அகமது ஓமர் (3), இயான் சவுகான் (7) ஏமாற்றினர். சுபம் கஜுரியா (24), சுபம் சிங் (30) ஆறுதல் தந்தனர். பராஸ் சர்மா (8), பசில் ரஷித் (9) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய கேப்டன் பர்வேஸ் ரசூல் அரைசதம் கடந்தார்.

ஜம்மு–காஷ்மீர் அணி 40.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரசூல் (71), வாசீமா ராஜா (4) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் வருண் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தமிழக அணி இதுவரை விளையாடிய 8 லீக் போட்டியில் 5 வெற்றி, 3 தோல்வியை பெற்றுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?