Advertisement


கரண் வீர் கவுஷல் இரட்டை சதம்: விஜய் ஹசாரே தொடரில் சாதனை

அக்டோபர் 06, 2018.
 Comments  
 


Karn Veer Kaushal, Uttarakhand, Cricket, Vijay Hazare Trophy, Double Century
 

நதியாத்: விஜய் ஹசாரே டிராபியில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் கரண் வீர் கவுஷல். 

பி.சி.சி.ஐ., சார்பில் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) கிரிக்கெட் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. குஜராத் மாநிலம் நதியாத் நகரில் நடந்த ‘பிளேட் குரூப்’ லீக் போட்டியில் உத்தரகண்ட், சிக்கிம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சிக்கிம் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

உத்தரகண்ட் அணிக்கு கரண் வீர் கவுஷல், வினீத் சக்சேனா ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய வினீத் சதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 296 ரன் சேர்த்த போது வினீத் (100) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய கரண் வீர் கவுஷல் 135 பந்தில் 9 சிக்சர், 18 பவுண்டரி உட்பட 202 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இவர் விஜய் ஹசாரே டிராபியில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.

உத்தரகண்ட் அணி, 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 366 ரன்கள் குவித்தது.

சவாலான இலக்கை விரட்டிய சிக்கிம் அணி லீ யங் லெப்சா (65), பதாம் (51*) ஆறுதல் தந்தனர். சிக்கிம் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் மட்டும் எடுத்து, 199 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதல் வீரர்

அபாரமாக ஆடிய உத்தரகண்ட் அணியின் 27 வயது வீரர் கரண் வீர் கவுஷல், 202 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இவர், விஜய் ஹசாரே டிராபியில் இரட்டைசதமடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், 2007–08 சீசனில் புனேயில் நடந்த மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய அஜின்கியா ரகானே 187 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

296 ரன்கள்

உத்தரகண்ட் அணியின் கரண் வீர் கவுஷல், வினீத் சக்சேனா ஜோடி 296 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இந்தியாவில் நடந்த ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடியானது. இதற்கு முன், 2008ல் நடந்த விஜய் ஹசாரே டிராபியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டில்லி அணியின் ஷிகர் தவான், ஆகாஷ் சோப்ரா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 277* ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

3 சதம்

சிக்கிம் அணிக்கு எதிராக உத்தரகண்ட் அணியின் கரண் வீர் கவுஷல் 202 ரன்கள் எடுத்தார். இது, ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் இவரது 3வது சதம். ஏற்கனவே பாண்டிச்சேரி (101 ரன், 2018), மிசோராம் (118 ரன், 2018) அணிகளுக்கு எதிராக சதமடித்திருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?