Advertisement


கால்பந்து: இந்திய பெண்கள் ஏமாற்றம்

அக்டோபர் 05, 2018.
 Comments  
 


india, womens soccer, south asia
 

திம்பு: தெற்காசிய கால்பந்து (18 வயது) தொடரின் அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி 1–3 என, ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் நேபாளத்திடம் தோல்வியடைந்தது.

பூடானில், 18 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் நேபாளத்தின் ராஸ்மி குமாரி முதல் கோலடித்தார். இதற்கு 62வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் சகவீராங்கனை துாக்கி அடித்த பந்தை இந்தியாவின் ஜெபமணி தலையால் முட்டி ஒரு கோலடித்து பதிலடி தந்தார்.

ஆட்டநேர முடிவில் போட்டி 1–1 என சமநிலையில் இருந்தது. பின், கூடுதல் நேரத்தில் இரு அணியினரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து போட்டியின் முடிவு ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. இதில் ஏமாற்றிய இந்திய அணி 1–3 என்ற கணக்கில் தோல்வியடைந்து பைனல் வாய்ப்பை இழந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?