Advertisement


‘கில்லி’ கோஹ்லி...‘ஜாலி’ ஜடேஜா: இந்திய ‘பிடியில்’ வெஸ்ட் இண்டீஸ்

அக்டோபர் 05, 2018.
 Comments  
 


india vs west indies, jadeja ,cricket test, rajkot
 
ராஜ்கோட்: முதல் டெஸ்டில் கேப்டன் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா சதம் விளாச, முதல் இன்னிங்சில் இந்திய அணி 649 ரன்கள் குவித்தது. ஷமி, அஷ்வின் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் ‘பிடியில்’ சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து ‘இன்னிங்ஸ்’ தோல்வி அடையும் அபாயத்தில் உள்ளது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில்நடக்கிறது.முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (72), ரிஷாப் பன்ட் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரிஷாப் ‘வேகம்’

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு ரிஷாப் வேகமாக ரன்கள் சேர்த்தார். கீமோ பால் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் என விளாசிய ரிஷாப், அரைசதம் எட்டினார். அடுத்து வந்த சேஸ் ஓவரிலும் பவுண்டரி, சிக்சர் என அடித்தார் ரிஷாப்.

கோஹ்லி அபாரம்

மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி, கேபிரியல் பந்துகளில் அவ்வப்போது பவுண்டரி அடித்தார். தொடர்ந்து பிஷூ பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் 24 வது சதம் எட்டினார். இந்திய அணி கேப்டனாக இவர் அடித்த 17வது சதம் இது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்த போது, 92 ரன் எடுத்திருந்த ரிஷாப், சிக்சருக்கு ஆசைப்பட்டு சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். பிறகு கோஹ்லியுடன் ஜடேஜா இணைந்தார். பிஷூ ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த கோஹ்லி 139 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஜடேஜா கலக்கல்

அஷ்வின் (7), குல்தீப் (12) விரைவில் திரும்பினர். சேஸ் பந்தில் பவுண்டரி அடித்த ஜடேஜா வேகமாக ரன்கள் சேர்த்தார். பிஷூ, சேஸ் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார். உமேஷ் யாதவ் (22) அவுட்டான போதும், சிக்சர் மழையை தொடர்ந்தார் ஜடேஜா. இவர் டெஸ்ட் அரங்கில் முதல் சதம் அடித்து அசத்தினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 649 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜடேஜா (100), முகமது ஷமி (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஷமி நம்பிக்கை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பவுலிங்கைப் போலவே பேட்டிங்கும் எடுபடவில்லை. ஷமியின் இரண்டாவது ஓவரில் பிராத்வைட் (2) போல்டானார். தொடர்ந்து மிரட்டிய இவர், பாவெலையும் (1) வெளியேற்றினார். ஷமி பந்தில் பவுண்டரி அடித்த ஹோப் (10), அஷ்வின் ‘சுழலில்’ போல்டானார். ஹெட்மயர் (10) ‘ரன்–அவுட்’ ஆனார். அஷ்வின் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த அம்ரிசை (12) ஜடேஜா ‘பெவிலியனுக்கு’ அனுப்பினார். தன் பங்கிற்கு ஜொலித்த குல்தீப், டவ்ரிச்சை (10) அவுட்டாக்க 74 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. கீமோ பால் (13), சேஸ் (27) அவுட்டாகாமல் இருந்தனர். 

கைவசம் 4 விக்கெட் மட்டும் உள்ள நிலையில் 555 ரன்கள் பின் தங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, பாலோ ஆனை தவிர்க்க 356 ரன்கள் எடுக்க வேண்டும். இதனால் முதல் டெஸ்டில் இந்திய அணி ‘இன்னிங்ஸ்’ வெற்றி பெறலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?