Advertisement


ரெய்னா அணி அதிர்ச்சி தோல்வி

அக்டோபர் 04, 2018.
 Comments  
 


Vijay Hazare Trophy Cricket, Raina, UP Team, Kerala
 

புதுடில்லி: கேரளா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் ரெய்னா தலைமையிலான உ.பி., அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விஜய் ஹசாரே டிராபி தொடர் நடக்கிறது. டில்லியில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் ரெய்னாவின் உ.பி., கேரளா அணியை எதிர் கொண்டது. ‘டாஸ்’ வென்ற உ.பி., அணி பவுலிங் தேர்வு செய்தது.

கேரளா அணிக்கு விஷ்ணு வினோத் (31), ஜலாஜ் சக்சேனா (36) துவக்கம் தந்தனர். கேப்டன் சச்சின் பேபி 6 ரன்களில் திரும்பினார். ஜெகதீஸ் (82) அரை சதம் கடந்தார். கேரளா அணி 50 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

எட்டிவிடும் இலக்கை துரத்திய உ.பி., அணிக்கு சமர்த் சிங் (42) நம்பிக்கை தந்தார். ஆகாஷ்தீப் நாத் (21), ரின்கு சிங் (33) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் ரெய்னா (66) அரை சதம் விளாசினார். இருப்பினும், கடைசி கட்டத்தில் பவுலர்கள் துல்லியமாக பந்துவீச, உ.பி., அணி 49.5 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. கேரளா சார்பில் சக்சேனா, அக்சய், வினோப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

டில்லி அணி வெற்றி

டில்லியில் நடந்த மற்றொரு ‘பி’ பிரிவு லீக் போட்டியில் ம.பி., டில்லி அணிகள் மோதின. முதலில் விளையாடிய டில்லி அணிக்கு நிதிஷ் ராணா (107) சதம் அடிக்க, 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்தது. பின், களமிறங்கிய ம.பி., அணிக்கு கேப்டன் நமன் ஓஜா (8) சொதப்பினார். வெங்கடேஷ் ஐயர் (53) மட்டும் ஆறுதல் தந்தார். ம.பி., அணி 42.4 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?