Advertisement


நெத்தியடி கொடுத்த பிரித்வி: அறிமுக டெஸ்டில் அசத்தல் சதம்

அக்டோபர் 04, 2018.
 Comments  
 


india vs west indies, test cricket, rajkot, prithvi shaw
 

ராஜ்கோட்: அறிமுக டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு நெத்தியடி கொடுத்த பிரித்வி ஷா, 99 பந்தில் சதம் விளாசி அசத்தினார். புஜாரா, கோஹ்லி அரைசதம் கைகொடுக்க இந்திய அணி இமாலய இலக்கை நோக்கி முன்னேறுகிறது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் துவங்கியது.‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் மகாராஷ்டிராவை சேர்ந்த இளம் வீரர் பிரித்வி ஷா அறிமுகம் ஆனார். இந்திய அணியில் உமேஷ் யாதவ், முகமது ஷமி என இரண்டு ‘வேகங்களும்’, அஷ்வின், ஜடேஜா, குல்தீப் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கணுக்கால் காயம் காரணமாக ஹோல்டருக்குப் பதில், பிராத்வைட் கேப்டனாக களமிறங்கினார். சுனில் அம்ரிஸ், ஷெர்மான் லீவிஸ் அறிமுகம் ஆகினர்.

ராகுல் ‘டக்’

இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஜோடி துவக்கம் கொடுத்தது. கேபிரியல் வீசிய இரண்டாவது பந்தை சந்தித்த பிரித்வி ஷா, மூன்று ரன்கள் எடுத்து சர்வதேச டெஸ்ட் அரங்கில் ரன் கணக்கைத் துவக்கினார். இதே ஓவரின் கடைசி பந்தில் ராகுல் ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

‘சூப்பர்’ ஜோடி

பிரித்வி ஷாவுடன், உள்ளூர் வீரர் புஜாரா இணைந்தார். கீமோ பால் பந்தில் முதல் பவுண்டரி அடித்த பிரித்வி, இவரது அடுத்த ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசினார். புஜாரா தன் பங்கிற்கு லீவிஸ் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி, 56 வது பந்தில் அரைசதம் எட்டினார். இந்த ஜோடியின் வேகமான ரன் குவிப்பு கைகொடுக்க இந்திய அணியின் ஸ்கோர் 19.5 வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. லீவிஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய புஜாரா, 19வது அரைசதம் எட்டினார். டெஸ்ட் அரங்கில் உணவு இடைவேளைக்கு முன் புஜாரா அரைசதம் எட்டியது இது தான் முதன் முறை.

முதல் சதம்

பிஷூ ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்த பிரித்வி, 99வது பந்தில் சதம் அடித்து அசத்தினார். லீவிஸ் பந்தில் இவர் ஒரு பவுண்டரி அடிக்க இந்திய அணி 40.3வது ஓவரில் 200 ரன்களை எட்டியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்த போது புஜாரா, 86 ரன்னுக்கு அவுட்டானார். அடுத்த சிறிது நேரத்தில் 134 ரன்கள் எடுத்த பிரித்வி, பிஷூ சுழலில் சிக்கினார்.

பின் கோஹ்லி, ரகானே இணைந்தனர். கோஹ்லி 20வது அரைசதம் எட்டினார். டெஸ்ட் அரங்கில் இந்த ஜோடி 8வது முறையாக 100 ரன்னுக்கும் மேல் சேர்த்தது. 4வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த போது ரகானே (41) அவுட்டானார். ரிஷாப் பன்ட் இப்போட்டியில் முதல் சிக்சர் அடித்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (72), ரிஷாப் பன்ட் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

புஜாரா–பிரித்வி ஜோடி அபாரம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் 2வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி வரிசையில் புஜாரா–பிரித்வி (206 ரன்) மூன்றாவது இடம் பிடித்தனர். முதல் இரண்டு இடங்களில் கவாஸ்கர்–வெங்சர்க்கார் (344 ரன், 1978), விஜய் மஞ்ச்ரேகர்–ராய் (237, 1953) ஜோடி உள்ளன.

1

அறிமுக டெஸ்டில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் ஆனார் பிரித்வி ஷா (18 வயது, 329 நாள்). இதற்கு முன் அபாஸ் அலி பெய்க் (20 வயது, 126 நாள்) இங்கிலாந்துக்கு (1959, மான்செஸ்டர்) எதிராக இச்சாதனை படைத்திருந்தார்.

2

நேற்று தனது 18 வயது 329 வது நாளில் இந்திய டெஸ்ட் அரங்கில் 293வது வீரராக அறிமுகம் ஆனார் பிரித்வி ஷா. இதையடுத்து குறைந்த வயதில் டெஸ்ட் அணியில் துவக்க வீரராக அறிமுகம் ஆன இரண்டாவது இந்திய வீரர் ஆனார். முதலிடத்தில் விஜய் மெஹ்ரா (17 வயது, 265 நாள்) உள்ளார்.

* தவிர குறைந்த வயதில் அறிமுகம் ஆன இந்திய டெஸ்ட் வீரர்களில் நான்காவது இடம் பெற்றார். முதல் மூன்று இடத்தில் சச்சின் (16 வயது, 205 நாள்), விஜய் மெஹ்ரா, ஏ.ஜி.மில்கா சிங் (18 வயது, 13 நாள்) உள்ளனர்.

3

குறைந்த பந்துகளில் அறிமுக டெஸ்டில் சதம் (99 பந்து) அடித்த மூன்றாவது வீரர் ஆனார் பிரித்வி ஷா. முதலிடத்தில் ஷிகர் தவான் (85 பந்து, ஆஸி., 2013) உள்ளார். வெஸ்ட் இண்டீசின் டுவைன் ஸ்மித் (93 பந்து, தெ.ஆப்., 2004) 2வது இடத்தில் உள்ளார்.

4

முதல் டெஸ்டில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் தவான் (187 ரன்), ரோகித்துக்கு (177), குண்டப்பா விஸ்வநாத்துக்கு (137) அடுத்து நான்காவது இடம் பிடித்தார் பிரித்வி ஷா (134).

4

அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 4வது இளம் வீரர் ஆனார் இந்தியாவின் பிரித்வி ஷா (18 வயது, 329 நாள்). முதல் மூன்று இடத்தில் வங்கதேசத்தின் அஷ்ரபுல் (17 வயது, 65 நாள், எதிர்–இலங்கை, 2001), ஜிம்பாப்வேயின் மசகட்சா (17, 352 நாள்), பாகிஸ்தானின் சலீம் மாலிக் (18, 323 நாள்) உள்ளனர்.

* அறிமுக டெஸ்டில் சதம் அடித்தவர்களில் 15வது இந்திய வீரர் ஆனார் பிரித்வி ஷா.

364

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் ஒரு நாளில் இந்தியா எடுத்த அதிக ரன்னாக 364/4 ரன் அமைந்தது. இதற்கு முன் 2006ல் கிராஸ் ஐஸ்லட் டெஸ்டில் இந்தியா 361/4 ரன்கள் எடுத்திருந்தது.

0

நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட், முதல் இன்னிங்சில் லோகேஷ் ராகுல் ‘டக்’ அவுட்டானார். இதற்கு முன் 2016ல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் (விசாகப்பட்டனம்), 2017ல் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் (கோல்கட்டா) முதல் இன்னிங்சில் இதுபோல ‘டக்’ அவுட்டானார்.

அறிமுக அமர்க்களம்

அறிமுக போட்டிகளில் சதம் அடித்து அசத்துகிறார் பிரித்வி ஷா. கடந்த 2017, ரஞ்சி கோப்பை அரையிறுதியில் தமிழகத்துக்கு எதிராக அறிமுகம் ஆன இவர் 120 ரன் அடிக்க (17 வயது, 57 நாள்), மும்பை அணி வெற்றி பெற்றது.

* இதே ஆண்டில் அறிமுக துலீப் டிராபி போட்டியிலும் 154 ரன் (17 வயது, 318 நாள்) அடித்தார்.

* 2018 உலக கோப்பை தொடரில் (19 வயது) கேப்டனாக இருந்து கோப்பை வென்று தந்த இவர், நேற்று களமிறங்கிய முதல் டெஸ்டில் சதம் விளாசினார்.

* ரஞ்சி கோப்பை, துலீப் டிராபி, டெஸ்ட் என மூன்று அறிமுக போட்டியிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் பிரித்வி ஷா தான். இதற்கு முன் குண்டப்பா விஸ்வநாத், அறிமுக ரஞ்சி, டெஸ்டில் மட்டும் சதம் அடித்திருந்தார்.

பாராட்டு மழையில்...

அறிமுக டெஸ்டில் சதம் விளாசிய பிரித்வி ஷாவுக்கு முன்னாள் இந்திய வீரர்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர். இதன் விவரம்:

* சச்சின்

முதல் போட்டியிலேயே தாக்குதல் பாணியில் விளையாடியதை பார்க்க நன்றாக இருந்தது. துணிச்சலான ஆட்டத்தை தொடர வேண்டும்.

*சேவக்

இது பிரித்வி ஷாவின் ‘ஷோ’. வாழ்த்துக்கள் ஷா.

* ஹர்பஜன்

இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆன போட்டியில் சதம் அடித்தது மகிழ்ச்சி. 18 வயதில் என்ன ஒரு சிறப்பான தருணம்.

* லட்சுமண்

வியக்கத்தக்க சதம் இது. இவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

ஹோல்டர் விலகியது ஏன்

டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் கீமர் ரோச் இல்லாத நிலையில், நேற்று கேப்டன் ஹோல்டரும் கணுக்கால் காயம் காரணமாக விலகியது பெரும் பின்னடைவைத் தந்தது. இத்தொடருக்கு தயாராக துபாயில் பயிற்சியில் ஈடுபட்ட போது இக்காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. பயிற்சி போட்டியில் பவுலிங் செய்யாத இவர், வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். நேற்று கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?