Advertisement


அபினவ் முகுந்த் சதம்: தமிழகம் வெற்றி

அக்டோபர் 03, 2018.
 Comments  
 


Vijay Hazare Trophy Cricket, Tamil Nadu, Tripura, Abhinav Mukund
 

சென்னை: திரிபுரா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் அபினவ் முகுந்த் சதம் கடந்து கைகொடுக்க தமிழக அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பி.சி.சி.ஐ., சார்பில் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. சென்னையில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் திரிபுரா, தமிழகம் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த திரிபுரா அணிக்கு ஸ்மித் படேல் (60), நினத் கடாம் (31), அபிஜித் சர்க்கார் (24), பிராவிஷ் ஷெட்டி (20) கைகொடுத்தனர். திரிபுரா அணி 46.4 ஓவரில் 196 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. தமிழகம் சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3, ராஹில் ஷா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு நாராயண் ஜெகதீசன் (40) நல்ல துவக்கம் தந்தார். முரளி விஜய் (3) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய அபினவ் முகுந்த் சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார். தமிழக அணி 31.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபினவ் முகுந்த் (131), பாபா இந்திரஜித் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

தமிழக அணி, இதுவரை விளையாடிய 7 போட்டியில், 5 வெற்றி, 2 தோல்வியை பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?