Advertisement


புரியாத புதிரா வீரர்கள் தேர்வு: ஹர்பஜன் சிங் ஆதங்கம்

அக்டோபர் 02, 2018.
 Comments  
 


harbhajan singh, india, cricket
 

புதுடில்லி: ‘‘இந்திய வீரர் கருண் நாயருக்கு கடந்த மூன்று மாதமாக எந்தவொரு டெஸ்டிலும் வாய்ப்பு தரவில்லை. தேசிய அணிக்காக வீரர்களை எப்படித்தான் தேர்வு செய்கின்றனர் என்று புரியவில்லை,’’ என இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் தெரிவித்தார்.

இந்தியஅணி வீரர்கருண் நாயர், 26.டெஸ்ட் அரங்கில் சேவக்கிற்குப்பின் முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் இவர்தான். இதுவரை 6 டெஸ்டில் மட்டுமே விளையாடி உள்ளார். கடந்த 6 டெஸ்ட் போட்டிகளுக்கு (ஆப்கானிஸ்தான்–1, இங்கிலாந்து–5) தேர்வான போதும், ஒன்றில் கூட ‘லெவன்’ அணியில் இடம் கிடைக்கவில்லை. நாளை துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் தேர்வு செய்யப்படவில்லை.

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறியது: கருண் நாயர் கடந்த மூன்று மாதமாக டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பிடித்த போதும், களமிறங்கும் ‘லெவன்’ அணியில் வாய்ப்பு தரப்படவில்லை. இது மர்மமாக உள்ளது. தேசிய அணிக்காக வீரர்களை எப்படித் தேர்வு செய்கின்றனர் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கென என்ன அளவு கோல் வைத்துள்ளனர் என தெரியவில்லை. இதை எண்ணி வேதனைப்படுகிறேன். 

நம்பிக்கை இருக்குமா

ஒவ்வொரு வீரருக்கும் விதவிதமான விதிமுறையை கடைபிடிக்கின்றனர். சிலருக்கு தொடர்ந்து வாய்ப்பு தந்து கொண்டே இருக்கின்றனர். சில வீரர்களுக்கு வாய்ப்பு தருவதே இல்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பிடித்துள்ள ஹனுமா விஹாரி, ஒரு வேளை ஜொலிக்கவில்லை எனில் என்ன செய்வார்கள். மீண்டும் கருண் நாயரை தேர்வு செய்வார்களா. இவர் ஆஸ்திரேலியா தொடருக்கு எந்த நம்பிக்கையுடன் விளையாடுவார். வீரர்கள் தேர்வு முறையில் உள்ள தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?