Advertisement


கோவா – வடகிழக்கு யுனைடெட் ‘டிரா’

அக்டோபர் 01, 2018.
 Comments  
 


ISL Football, Goa, North East United
 

கவுகாத்தி: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் வடகிழக்கு யுனைடெட், கோவா அணிகள் மோதிய லீக் போட்டி 2–2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 5வது சீசன் நடக்கிறது. நேற்று, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட், கோவா அணிகள் மோதின.

ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் அடுத்தடுத்து கிடைத்த 2 ‘கார்னர்’ வாய்ப்புகளை கோவா அணியினர் கோட்டைவிட்டனர். இந்நிலையில் 8வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் வடகிழக்கு யுனைடெட் அணியின் பெடரிகோ காலிகோ முதல் கோல் அடித்தார். இதற்கு 14வது நிமிடத்தில் கோவா அணி சார்பில் பதிலடி தரப்பட்டது. ஜாக்கிசந்த் சிங் ‘பாஸ்’ செய்த பந்தை கோரோ கோலாக மாற்றினார். தொடர்ந்து அசத்திய கோரோ, 38வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலடித்தார். முதல் பாதி முடிவில் கோவா அணி 2–1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட வடகிழக்கு யுனைடெட் அணிக்கு 53வது நிமிடத்தில் கீகன் பெரைரா ‘பாஸ்’ செய்த பந்தில் பர்தோலோமிவ் ஆக்பெசே ஒரு கோலடித்தார். ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் கோவா அணிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு மறுக்கப்பட்டது. பின், 90வது நிமிடத்தில் கிடைத்த ‘கார்னர்’ வாய்ப்பை கோவா அணியினர் கோட்டைவிட, வெற்றி நழுவியது. ஆட்டநேர முடிவில் போட்டி 2–2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?