Advertisement


ஆசிய கால்பந்து: இந்தியா தோல்வி

அக்டோபர் 01, 2018.
 Comments  
 


AFC U16 Soccer, Quarter Final, India, South Korea
 

கோலாலம்பூர்: ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (16 வயது) தொடரின் காலிறுதியில் இந்திய அணி, 0–1 என தென் கொரியாவிடம் வீழ்ந்தது.

மலேசியாவில் ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (16 வயது) தொடர் நடக்கிறது. இதன் லீக் சுற்றில் 1 வெற்றி, 2 ‘டிரா’ செய்த இந்திய அணி காலிறுதியில் வலிமையான தென் கொரியாவை சந்தித்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் 17 வயது உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் இரு அணிகளுகம் களமிறங்கின.

லீக் சுற்றில் ஒரு கோல் மட்டும் அடித்த இந்திய வீரர்கள், இம்முறையும் தடுமாறினர். இதனால் முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது. இரண்டாவது பாதியில் போட்டியின் 68 வது நிமிடம் தென் கொரிய வீரர் ஒருவர் அடித்த பந்து இந்திய கோல் கீப்பர் நீரஜ் கைகளில் பட்டுத் திரும்பியது.

உடனடியாக சுதாரித்த மற்றொரு வீரர் ஜியோங் சங் பின், வேகமாக வந்து பந்தை கோலாக மாற்றினார். இதற்கு பதிலடி தர இந்திய வீரர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 0–1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?